வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மாமியார் தலையில் மிளகாய் அரைக்கும் அர்ச்சனா.. வில்லத்தனத்தில் நம்பியாரை மிஞ்சிடுவாங்க போல

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி2 சீரியலில் வில்லியான அர்ச்சனாவின் செயல் பார்க்கும் ரசிகர்களை எரிச்சலடைய செய்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் வீட்டில் ஏதாவது ஒரு சதி வேலையை செய்து மாட்டிக்கொண்டு அதன் பிறகு தன்னுடைய உச்ச கட்ட நடிப்பைக் காட்டி தப்பித்து விடுவார். அந்த வகையில் தன்னுடைய வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதற்காக செந்திலை மயக்க திட்டமிட்டு குற்றாலத்திற்கு குஷியாக இருக்க சென்றிருக்கிறார்.

ஆனால் விபச்சார தொழில் அதிகம் நடைபெறும் மோசமான லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்த அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் போலீசிடம் சிக்கிக் கொண்டனர். தற்போது அவர்களை விடுவிப்பதற்காக சரவணன் போலீஸ் ஸ்டேஷன் சென்று அங்கிருப்பவர்களிடம் பேசி சரவணன் மற்றும் அர்ச்சனாவை வெளியில் கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு செல்லும் வழியில் ஆட்டோவை நிறுத்திய சரவணன், செந்தில் மற்றும் அர்ச்சனா இருவரையும் கண்டபடி திட்டுகிறார்.

அப்போதும் திருந்தாத அர்ச்சனா, ‘பக்கம் பக்கமாக சாமியார் மாதிரி போதனை செய்துகொல்றான். இவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு காப்பாற்ற கூப்பிடாமல் பேசாம இவன் பேச்சைக் கேக்குறதுக்கு போலீஸ் ஸ்டேஷனில் 4 நாட்கள் இருந்திருக்கலாம்’ என்று சரவணன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டே தனக்குள் பேசிக் கொள்கிறார். மேலும் சரவணா செந்திலிடம் நேர்மையாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்று இருக்கலாமே.

அதை விட்டுவிட்டு பச்சையாக பொய் சொல்லி அதுவும் அர்ச்சனா அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை, நெஞ்சு வலி, உயிருக்கு ஆபத்து ஆஸ்பத்திரியில் போராடிக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம் அர்ச்சனா பொய் சொல்லியது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை என்று சரவணன் கடுமையாக திட்டுகிறார். இருப்பினும் அர்ச்சனா இதுக்கெல்லாம் அசராம, இதன் பிறகும் தன்னுடைய வேலையை காட்ட தான் போகிறார். மேலும் வீட்டிற்கு செல்லும் அர்ச்சனாவிற்கு சந்தியா மற்றொரு அதிர்ச்சியையும் தர காத்திருக்கிறார்.

ஏனென்றால் அர்ச்சனா தான், மாமியார் சிவகாமியை தன்னுடைய தங்கச்சி பிரியா மூலம் பொய்யான புகார் அளித்து ஜெயிலுக்கு அனுப்பியதை சந்தியா கண்டுபிடித்துவிட்டார். இந்த முறை சந்தியா அர்ச்சனாவை மன்னிக்கப் போவதில்லை. இந்த விஷயத்தை வீட்டில் தெரிவித்த பலருடைய கோபத்திற்கு அர்ச்சனா ஆளாக போகிறார். இருப்பினும் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிவித்து அவர்களுடைய கோபத்திலிருந்து தப்பிக்க அர்ச்சனா திட்டமிட்டுள்ளார்.

இதன்பிறகு அர்ச்சனா தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையை வைத்து சிவகாமியின் மனதில் இருக்கும் கோபத்தை மாற்றி தனக்கு சாதகமாக வீட்டில் இருப்பவர்களை மாற்றுகிறார். மேலும் சந்தியாவும் அர்ச்சனா கர்ப்பமாக இருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டு அவர் செய்த தவறை மன்னித்து விடுவார். இதெல்லாம் இனிவரும் எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது.

Trending News