வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

50 நாட்களில் புஷ்பா செய்த வசூல் வேட்டை.. அடேங்கப்பா! மிரளும் திரையுலகம்!

தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த திரைப்படம் தான் புஷ்பா தி ரைஸ் பார்ட் 1. ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது. குறிப்பாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா பாடல் பலர் லூப் மோடில் பார்க்கும் அளவிற்கு கிறுக்கு பிடிக்க வைத்து இருக்கிறது.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இந்திய அளவில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. காட்சிக்கு காட்சி காட்டும் சுவாரஸ்யம், ஆக்சனில் அதிரடி காட்டும் ஹீரோ என பக்கா கமெர்ஷியல் பேக்கேஜாக படம் இருக்கிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் உடல் மொழி வெகுவாக பேசப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் , சினிமா பிரபலங்கள் என பலரும், அல்லு அர்ஜூனின் கதாபாத்திரத்தை இமிடேட் செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தெலுங்கு ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாகவும் அதே நேரத்தில் மற்ற மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் மசாலாவை அளவோடு தூவி விட்டு இருக்கின்றனர் படக்குழுவினர்.

இருந்தாலும், படம் வெளியான நேரத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என நினைத்த போது வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து விட்டது. 50 நாட்களை கடந்தது மட்டுமல்லாமல் உலகளவில் ரூ.365 கோடி வசூல் செய்து உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் புஷ்பா படமும் இணைந்து விட்டது.

இதனால், புஷ்பா திரைப்படம் சென்ற ஆண்டில் வெளியான படங்களில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்று விட்டது. #50DaysForBlockbusterPushpa என்ற ஹேஷ்டெக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் புஷ்பா பட ரசிகர்கள்.

Trending News