வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரோஷினியை தொடர்ந்து பாரதிகண்ணம்மாவில் இருந்து விலகும் நடிகை.. இதுவும் போச்சா!

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகி ரோஷினி ஹரிப்ரியன், இந்த சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதில் வினுஷா தேவி நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மாற்றினால் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர்.

அந்த வகையில் ரோஷினி தொடர்ந்து இந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தி நடித்துக்கொண்டிருக்கும் கண்மணி விலக உள்ளார். இவர் தொடக்கத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் வில்லியாக காட்டப்பட்டாலும் அதன் பிறகு மனம் திருந்தி நல்லவளாக காட்டப்பட்டு கொண்டிருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் சில வாரங்களாக அஞ்சலி பாரதிகண்ணம்மா சீரியலில் பார்க்கவே முடியவில்லை. இதற்கு ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கேள்விகள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் கண்மணி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கண்மணி ஜீ தமிழில் புதிதாக துவங்க உள்ள சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றதால், விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார்.

ஆகையால் பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாப்பாத்திரத்தில் சீரியல் நடிகை அருள் ஜோதி இனி வரும் நாட்களில் நடிக்கப்போகிறார். நடிகை அருள்ஜோதி ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் நடித்து கொண்டிருப்பதால் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

எனவே கண்மணியை அலேக்காக விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் தூக்கிவிட்டது. இதனால் பாரதிகண்ணம்மா சீரியலில் ஏற்பட்டிருக்கும் இந்த மற்றும் ஆனது சீரியலின் டிஆர்பி-க்கு பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது.

Trending News