வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

செருப்பை கழட்டி அடிக்க போன சரவணன்.. கந்தலான ராஜா ராணி2 சீரியல்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் இவ்வளவு நாள் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு சதி செய்த வில்லியின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அர்ச்சனா சிவகாமியின் மீது தன்னுடைய தங்கையை வைத்து பொய் புகார் அளித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பியது சரவணனின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த சரவணன், குடும்ப மானத்தை மனைவியுடன் சேர்ந்து வாங்கி விட்டாயே என்று செந்திலை செருப்பை கழட்டி ஆவேசத்துடன் அடிக்கப் போகிறார். வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சரவணனை தடுத்து நிறுத்துகின்றனர்.

இதன்பிறகு சிவகாமி, பாம்பை நடு வீட்டிலேயே பாலூட்டி வளர்த்துள்ளோம் என்று அர்ச்சனாவை கண்டபடி பேசி தீர்க்கிறார். அதுமட்டுமின்றி அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரையும் சிவகாமி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் போது அர்ச்சனா மயங்கி விழுவது போல் நாடகமாடுகிறார்.

சிறு வயதிலிருந்தே படிப்பை நிறுத்தி தன்னுடைய தம்பி தங்கச்சிக்காக ஸ்வீட் கடையில் பாடுபட்டு உழைத்த சரவணன், திடீரென்று தம்பி செந்தில் செய்த கீழ்த்தரமான செயலை கண்டு முதல் முதலாக ராஜா ராணி2 சீரியல் கொந்தளித்திருப்பதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

அதன் பிறகு அர்ச்சனா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்த சிவகாமி மற்றும் சரவணன் உள்ளிட்டோர் அர்ச்சனாவை மன்னித்து வயிற்றில் வளரும் குழந்தைக்காக அவர்கள் இருவரையும் மன்னித்து விடுகின்றனர். இருப்பினும் வீட்டில் இருப்பவர்களுக்கு அர்ச்சனா-செந்தில் செய்த சதி வேலைகளை மறப்பதற்கு கொஞ்சம் நாள் எடுக்கும்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அர்ச்சனா தன்னுடைய உச்சகட்ட நடிப்பை காட்டி சிவகாமியை வசியம் செய்து அந்த வீட்டிலேயே தங்கி, மீண்டும் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டப் போகிறார்.

Trending News