சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இயக்குனர் ஷங்கருக்கே பட்டை போடும் தில் ராஜ்.. எனக்கு வேற வழி தெரியல ஆத்தா

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார்.

பொதுவாக ஷங்கர் படம் என்றால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமிருக்காது இந்தப்படத்திலும், அதை விட்டுக் கொடுக்காமல் பிரமாண்டத்தை புகுத்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார், வெளிநாடு மற்றும் இந்தியா என்று படு பிசியாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது’

இந்நிலையில் புனேவில் எடுக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சிக்காக கிட்டத்தட்ட 10 கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறார்கள் . அதுமட்டுமின்றி இதற்கு முன்னர் எடுத்த ஒரு பாடல் காட்சிக்கு 25 கோடிகள், என மொத்தம் 35 கோடிகளை இதற்காகவே செலவழித்து விட்டார் ஷங்கர்.

இதனைப் பார்த்து மிரண்டு போன தில் ராஜ், இப்படியே சென்றால் மொத்த பட்ஜெட்டும் எங்கேயோ போய்விடும் என்று சில முட்டுக்கட்டைகள் போட்டிருக்கிறார். அதில் ஒன்று தான் ஷங்கரின் சம்பளம்.

இந்த படத்தில் ஷங்கருக்கு 50 கோடிகள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த செலவுகளை பார்த்த தில் ராஜ், அதில் 20 கோடிகளை குறைத்து விட்டார். அதுமட்டுமின்றி இனி வரும் சண்டை மற்றும் பாடல் காட்சிகளை கொஞ்சம் சிக்கனமாக எடுக்கலாம் என்றும் முடிவு பண்ணியுள்ளார்.

இந்தப் படத்தை முழுவதுமாக வியாபாரம் செய்து விட்டால் ஷங்கருக்கு முழு சம்பளம் கொடுப்பதாகவும், அதாவது பேசப்பட்ட 50 லட்சத்தையும். இல்லை என்றால் 20 கோடிகள் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

தில் ராஜ்ஜின் இந்த முடிவை ஷங்கர் தரப்பு ஏற்குமா அல்லது பட்ஜெட்டை குறைத்து இனி வரும் சாட்சிகளை தயார் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தந்திரமாக இயக்குனர் ஷங்கருக்கு சரியான முட்டுக்கட்டை போட்டுள்ளார் தில் ராஜ்.

Trending News