வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கர்ப்பிணியை இப்படியா கதற விடுவது.. அம்பியாகஇருந்த சரவணன் அண்ணியன் ஆக மாறிவிட்டாரே!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் ஆனது தற்போது கூடுதல் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் அர்ச்சனா தன்னுடைய குடும்பத்திற்கு செய்த எல்லா சதி வேலைகளும் ஒவ்வொன்றாக ஆதாரத்துடன் தெரிந்து கொண்டிருக்கிறது.

தொடக்கத்தில் அமைதியாக இருந்த சரவணன், தன்னுடைய அம்மாவை ஜெயிலுக்கு அனுப்ப அர்ச்சனா திட்டம் தீட்டி செயல்படுத்தி இருப்பதை தாங்க முடியாமல் செருப்பை கழட்டி அடிக்க செல்கிறார். அத்துடன் அர்ச்சனாவின் மீது இருக்கும் கோபத்தை செந்திலிடமும் காட்டுகிறார்.

ஒரு சில விஷயங்களில் அர்ச்சனாவிற்கு துணை போன செந்தில், சிவகாமியின் மீது அளித்த புகார் குறித்து செந்திலுக்கு எதுவும் தெரியாது. இருப்பினும் அர்ச்சனாவின் கேவலமான செயலை கணவன் செந்தில் பலமுறை ஆதரிப்பதால் அர்ச்சனாவுடன் செந்திலையும் குற்றவாளியாக பார்க்கின்றனர்.

எனவே சரவணன் செந்தில் இருவரும் அடித்துக் கொள்ளும் நிலைக்கு வந்திருப்பதால், அவர்களைத் தடுத்து நிறுத்தும் சிவகாமி இதுகுறித்து முடிவெடுப்பதாக கூறுகிறார். இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு அர்ச்சனா, தான் கர்ப்பமாக இருக்கும் உண்மையை அவிழ்த்து விடப் போகிறார்.

இதனால் வீட்டில் இருப்பவர்களிடம் அனுதாபம் தேடி, தன் மீது இருக்கும் கோபத்தை தணிப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்கி, மாமியார் சிவகாமி உட்பட அனைவரையும் தன்னிடம் இரக்கப்படும் அளவுக்கு உச்சகட்ட நடிப்பை அரங்கேற்றுவார்.

அதன் பிறகு வீட்டில் இருப்பவர்களும் அர்ச்சனாவை மன்னித்து ஏற்றுக் கொண்டாலும் அர்ச்சனா தன்னுடைய குணத்தை மாற்றாமல் மீண்டும் தன்னுடைய வில்லத்தனத்தை தொடர்ந்து குடும்பத்தினரிடம் காட்டப் போகிறார்.

Trending News