விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்பொழுதும் கூட்டு குடும்பத்துடன் வாழும் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையுடன் இருப்பதை அழகாக கட்டுவதால் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சிறு மளிகை கடையில் இருந்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை கட்டி தங்களுடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்ற உள்ளனர். ஆனால் கதிர் மற்றும் கண்ணன் இருவரும் பகைத்துக் கொண்ட ரவுடி கும்பலால் அந்தக் கடை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவுமாறு ஜீவா மீனாவின் அப்பாவிடம் உதவி கேட்கிறார். அத்துடன் ஐந்து லட்சம் மதிப்புடைய சரக்குகள் மழையில் நனைந்து வீணாகி கொண்டிருப்பதால், அதை பாதுகாப்பாக வைப்பதற்கு குடோன் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு கேட்கிறார்.
இதையெல்லாம் செய்வதாக மீனாவின் அப்பா ஜீவாவுக்கு நம்பிக்கை அளித்து, அதையெல்லாம் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க போவதாக தன்னுடைய மனைவியிடம் கூறுகிறார். ஏனென்றால் அப்போதுதான் பாண்டியன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றுமில்லாமல் போய் விடும் அதன் பிறகு தன்னுடைய மருமகள் ஜீவா தன்னுடைய டிபார்ட்மென்ட் ஸ்டோரை பொறுப்பேற்று நடத்த முடியும் என்ற கேவலமான எண்ணத்துடன் மீனாவின் அப்பா ஜீவாவை நம்ப வைத்து கழுத்தை அறுக்கத் திட்டமிடுகிறார்.
இவ்வாறே அடுத்தடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு சோதனைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், மூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலீசார் நாளை டிபார்ட்மெண்ட் ஸ்டோரை இடிக்கப்போவதாக சொன்னதும் பேரதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் திகைத்து நிற்கிறது.
இருப்பினும் கதிர், மனம் தளராமல் மேல் அதிகாரியிடம் முறையிட்டு இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்ய உள்ளார். இவ்வாறு இந்த வாரம் முழுவதும் சோகக் காட்சிகளை ஒளிபரப்பு செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அடுத்த வாரம் கடைத் திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த உள்ளது.