சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகைகள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். தன்னுடைய அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அவர்கள் வாங்கும் புடவையில் இருந்தும் அணியும் நகைகளை வரை இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்கிறார்கள். இதன் மூலம் சீரியல் நடிகைகள் சம்பாதிக்கிறார்கள்.
கம்பம் மீனா: கம்பம் மீனா பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வருகிறார். இவருடைய வெள்ளந்தியான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் பல வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதன பொருட்களை விளம்பரம் செய்கிறார். இவரை 1.32 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்கள்.
வினுஷா தேவி: தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து வருபவர் வினுஷா தேவி. மிக குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இவர் அழகு சாதன பொருட்கள், உடைகள், அணிகலன் ஆகியவற்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளம்பரம் செய்து வருகிறார். இவரை 2.20 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
ராதிகா பிரீத்தி: கன்னட மொழி படங்களில் நடித்தவர் ராதிகா பிரீத்தி. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பூவேஉனக்காக தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் புடவைகள், அழகு சாதன பொருட்கள், அணிகலன்கள் போன்றவற்றை விளம்பரம் செய்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 4.66 பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்கள்.
ப்ரீத்தி சர்மா: சன்டிவி ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுவார். ப்ரீத்தி ஷர்மாவை 6.69 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்கள்.
ரோஷினி ஹரிப்ரியன்: கருப்பு நிற கதாநாயகிகளும் ரசிகர்களை கவர முடியும் என நிரூபித்தவர் ரோஷினி ஹரிப்ரியன். மாடலிங் துறையிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமானவர் ரோஷினி. சில காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். இவரை 9.72 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்கள்.
சுஜாதா தனுஷ்: சுஜாதா தனுஷ் தன்னுடைய சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். பல ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்துள்ளார். ஆனால் வெள்ளிதிரையை விட சின்னத்திரையில் தான் இவரை பிரபலமாக்கியது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் கதை கேளு கதை கேளு என்ற யூடியூப் சேனலில் நடத்தி வருகிறார். இவரை கிராமில் 9.77 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.