விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிகழ்ச்சியில் ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளாக நடக்கிறது. கிராமப்புறங்களில் முதல் வெளிநாடு வரை பாடல் திறமைகள் கொண்டவர்களை இந்நிகழ்ச்சி பிரபலமாக்கியது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழ் சினிமாவுக்கு பல பிளேபேக் சிங்கர்களை கொடுத்துள்ளது. அவ்வாறு இந்நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா. தன்னுடைய இனிமையான குரலினால் எக்கச்சக்க ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா வெற்றிக்கனியை பிடிக்க முடியவில்லை என்றாலும் திரைப்படங்களில் தற்போது பல பாடல்கள் பாடி வருகிறார். அவருடைய சமூக வலைத்தள பக்கங்களிலும் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
சூப்பர் சிங்கரில் பிரியங்கா பாடிய சின்னச் சின்ன வண்ணக் குயில் என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த அரங்கத்தினையும் கவர்ந்து இழுத்தார். பிரியங்கா எங்கு சென்றாலும் அவரது ரசிகர்கள் இந்த பாடலை பாடச் சொல்லி கேட்கிறார்கள். இதுவரை எத்தனை முறை இந்த பாடலை பாடியுள்ளார் என்பது அவருக்கே தெரியாது.
அந்தளவுக்கு பிரியங்கா எங்கு சென்றாலும் மன்னவன் பேரைச் சொல்லி என்ற இந்த காந்த குரல் பாடல் இடம் பெறுகிறது. இந்தப்பாடல் மௌன ராகம் படத்தில் ஜானகி பாடியிருந்தார். தற்போது அவர் குரலை மறக்கும் அளவுக்கு இந்த பாடல் எங்கு கேட்டாலும் அது பிரியங்கா குரலில்தான் ஒலிக்கிறது.
இந்த ஒரு பாடலை வைத்து பிரியங்கா ஒரு கோடி சம்பாதித்துள்ளார் என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மைனா நந்தினி கூறியுள்ளார். பிரியங்கா வெற்றிக்காக அவர் பல இழப்புகளை சந்தித்து உள்ளார். பின்னணி பாடகியாக உள்ள பிரியங்கா தற்போது பல படங்களில் பிசியாக உள்ளார்.