தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் தனுஷ். மற்ற நடிகர்களை விட தனுஷ் மிகவும் எளிமையான மனிதர் என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்திலேயே தெரிந்துவிடும். அந்த அளவிற்கு மிகவும் எளிமையாக நடந்து கொள்வார். அனைவருக்கும் சரியான மரியாதை கொடுப்பதில் அவர் வல்லவர்.
தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் பாதிபேர் தனுஷின் அரவணைப்பால் தான் சினிமாவில் நுழைந்தனர். அந்த அளவிற்கு தனுஷ் திறமை உள்ள மனிதர்களை என்றுமே விட்டு விடுவதில்லை. சரியான வாய்ப்பு கிடைத்தால் தாமாகவே முன்வந்து அவர்களுக்கு அந்த வாய்ப்பினை தந்துவிடுவார். இப்படி பல நடிகர்களுக்கு தனுஷ் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
ரோபோ ஷங்கர், தீனா, சதீஷ் போன்ற நடிகர்களுக்கு இவர்தான் வாய்ப்புகளை கொடுத்தார். இதனை அவர்களே பலமுறை பல பேட்டிகளில் கூறியுள்ளனர். இவ்வளவு ஏன் தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் திறமையை கண்டுபிடித்தது கூட தனுஷ்தான். இப்போது வேண்டுமானால் சிவகார்த்திகேயன் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வரலாம்.
ஆனால் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் போது அவரை கைகொடுத்து தூக்கி விட்டவர் தனுஷ்தான். எதிர்நீச்சல் கதையை கேட்டு இக்கதையில் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி அவருக்கு சரியான வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்து அவரது சினிமா வளர்ச்சிக்கு உதவினார். ஆனால் சமீபத்தில் சிவகார்த்திகேயன் சினிமாவில் பத்தாண்டு நிறைவை ஒட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பலருக்கும் நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், தனுசுக்கு மற்றும் எந்த ஒரு நன்றியும் கூறவில்லை. இதனால் பலரும் சிவகார்த்திகேயனை திட்டினர்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சரவணகுமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், தனுஷ் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது சினிமாவில் எப்படியாவது ஒரு சான்ஸ் கூட கிடைத்து விடாதா என பலரும் ஏங்கி வருகின்றனர். ஆனால் தனுஷ் திறமை உள்ளவர்களை கண்டால் அவர்களுக்கு பாராட்டுவது மட்டும் இல்லாமல் அவர்களுக்கான வாய்ப்பையும் வழங்குவார் என கூறினார்.
மேலும் தனது திறமையை, கூப்பிட்டு பாராட்டியதாகவும் சினிமாவில் வாய்ப்பு தருவதில் அவர் குரு எனவும் தெரிவித்தார். மேலும் சினிமாவில் இருப்பவர்களின் திறமையைக் கண்டு வாழ்த்தி வளர்த்துவிடும் அன்பு அசுரன் என அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனுஷ் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.