புதன்கிழமை, ஜனவரி 1, 2025

விஷ்ணு விஷால் படத்திற்கு திடீர் தடை.. அதிர்ச்சியில் படக்குழு!

ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது விஷ்ணு விஷாலின் அடுத்த படம். இந்த படம் நாளை வெளிவரும் சூழ்நிலையில் தற்போது ஒரு புதிய பிரச்சினையை கிளப்பி உள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கியுள்ள படம் தான் எஃப் ஐ ஆர். இப்படத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் வாசுதேவ் நடித்துள்ளார்.

விஷ்ணு விஷால் தயாரித்த எஃப் ஐ ஆர் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது. நாளை பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தை போல் எஃப் ஐ ஆர் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் விஷ்ணுவிஷால் இர்பான் அகமது ஆக முஸ்லிம் இளைஞனாக கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஒரு சிறிய கெமிக்கல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே சமயத்தில் இலங்கையில் உள்ள தலைநகர் கொழும்புவில் அபூபக்கர் அப்துல்லா என்ற பெயரில் ஒரு பயங்கரவாதி பல இடங்களில் குண்டு வைக்கின்றார்.

பின்பு விஷ்ணு விஷால் தான் அபுபக்கர் அப்துல்லா என உளவுத் துறை முடிவு செய்கிறது. கடைசியில் இதிலிருந்து விஷ்ணு எப்படி மீண்டு வருகிறார் என்பது எஃப் ஐ ஆர் படம். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் மலேசியா, குவைத், கத்தார் போன்ற நாடுகளில் உள்ள பார்வையாளர்கள் எஃப் ஐ ஆர் படத்தை தடை செய்துள்ளனர்.

முஸ்லிம் மதத்தை தவறாக சித்தரிப்பதாகவும், இம்மதத்திற்கு எதிராக உள்ளதாகவும் எஃப் ஐ ஆர் படத்தை தடை செய்துள்ளனர். ஆனால் இப்படத்தில் விஷ்ணு விஷாலும் முஸ்லிமாக தான் நடித்துள்ளார். எஃப் ஐ ஆர் படம் முஸ்லிம் மதத்தை நேர்மறையாக தான் காட்டியுள்ளது. ஆனால் எஃப் ஜ ஆர் படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றாலும் ஊடகங்கள் வழியாக விமர்சனங்களால் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் முக்கியமாக சொல்லப்போனால் விஷ்ணு விஷால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தான் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தீம் கூட ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த தடை குறித்து இணையதளத்தில் தற்போது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Trending News