வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கொலை வெறியான பொண்டாட்டி தாசன்.. பழிவாங்கத் துடிக்கும் அர்ச்சனா

விஜய் டிவியில் தற்போது கூடுதல் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் வில்லியான அர்ச்சனா தன்னுடைய குடும்பத்திற்கே செய்த சதி வேலைகள் அனைத்தும் ஆதாரத்துடன் வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிந்துள்ளது.

அதிலும் குறிப்பாக மாமியார் சிவகாமி மீது தன்னுடைய தங்கை பிரியாவை வைத்து பொய் புகார் அளித்தது, செந்திலுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தன்னுடைய அம்மாவை அசிங்கப்படுத்த நினைத்த அர்ச்சனாவுடன் இனி வாழ மாட்டேன் என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.

அப்போது அர்ச்சனா, வீட்டில் இருப்பவர்களை சமாளிக்க வேண்டும் என்பதற்காக தான் கர்ப்பமாக இருக்கும் உண்மையை தெரிவித்து அனுதாபம் தேடி மீண்டும் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். இருப்பினும் செந்தில் வயிற்றில் வளரும் குழந்தையை பெற்றுக் கொடுத்து விட்டு திரும்பவும் நீ உன்னுடைய அம்மா அப்பா வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அர்ச்சனாவை வீட்டிற்குள் சேர்த்துள்ளார்.

அதன்பிறகு செந்தில் தனியே அமர்ந்திருக்கும் அர்ச்சனாவிடம் ஆத்திரத்துடன் அழுதுகொண்டே, ‘சந்தியா அண்ணி தான் ஒவ்வொரு முறையும் உன்னை காப்பாற்றுகிறார். இப்பொழுது கூட போலீஸ் வந்து சொன்ன பிறகுதான் நீ அம்மா மீது கொடுத்த புகார் தெரியவந்திருக்கிறது. இதை ஏற்கனவே அண்ணி தெரிந்தும் உன்னை பற்றி ஒரு வார்த்தை கூட வீட்டில் பேசவில்லை.

அப்படிப்பட்டவர்கள் மீது கருக்கலைப்பு மாத்திரை நீ பயன்படுத்திக்கொண்டு சந்தியா அண்ணி மீது பழி போட்டாய்’ என்று சந்தியாவிற்கு எதிராக அர்ச்சனா செய்த ஒவ்வொரு சதி வேலையையும் செந்தில் சுட்டிக் காட்டினான்.

இருப்பினும் அர்ச்சனா அழுதுகொண்டே அதையெல்லாம் கேட்டும், வீட்டில் இருப்பவர்களின் காலில் விழ வைத்த சந்தியாவை பழிக்குப் பழி வாங்கப் போகிறேன் என்று வயிற்றில் வளரும் தன்னுடைய குழந்தையின் மீது சத்தியம் செய்கிறார். அத்துடன் அந்தக் குழந்தை பிறப்பதற்கு முன்பே சந்தியாவை இந்த வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் சபதம் இடுகிறாள்.

Trending News