செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பிரபல நடிகருடன் காதலில் விழுந்த நடிகை நதியா.. இது என்ன புது கதையா இருக்கு

80 காலகட்ட தமிழ் சினிமாவை கலக்கிய மிகச் சில நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. இவருடைய நடிப்புக்கு மட்டுமல்லாமல் அவர் அணியும் உடை மற்றும் அலங்காரங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அப்போது இருந்த பெண்கள் பலரும் அவருடைய ஸ்டைலை பின்பற்றியதும் உண்டு.

அவ்வளவு பிரபலமாக இருந்த நதியா அந்த காலகட்டத்தில் மிகக்குறுகிய வருடங்கள் மட்டும் தான் சினிமாவில் நடித்தார். ஆனால் அந்த சில வருடங்களில் இவர் மலையாளம், தமிழ் உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.

அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆன நதியா மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். இவரைப் பார்த்த பலரும் அவருக்கு இரண்டு பெரிய பெண்கள் இருக்கிறார்கள் என்று சத்தியம் செய்து சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் அதே இளமையுடன் இருக்கிறார்.

இதனால் நீங்கள் மீண்டும் ஹீரோயினாக நடிக்கலாம் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வரும் நதியாவை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவருடன் இணைந்து அதிக படங்களில் நடித்தவர் நடிகர் சுரேஷ்.

இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அந்த சமயத்தில் இவர்களின் காதல் விஷயம் சினிமா உலகில் பரபரப்பான செய்தியாக வெளியானது. ஆனால் அந்த செய்தி குறித்து அவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர்.

ஆனால் இடையில் அவர்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை நதியா வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். சினிமாவில் பிரபலமாக இருக்கும் போது அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பிறகு அந்த காதலை பற்றி எல்லோரும் மறந்து விட்ட நிலையில் இப்போது அவர்கள் இருவரிடமும் இதைப் பற்றி கேட்டால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும்தான் என்று கூறி வருகின்றனர்.

Trending News