திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

ஸ்பைடர் மேனுக்கு போட்டியாக வர போகும் சாகச ஹீரோ.. பழசை தூசிதட்டி கோடியில் லாபம்!

90 காலகட்டம் என்பது அப்போது இருந்த குழந்தைகளுக்கு ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் இப்பக்கூட நாங்கள்லாம் 90ஸ் கிட்ஸ் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். இதற்கு சில காரணங்களும் இருக்கிறது.

இப்போதெல்லாம் குழந்தைகள் பொழுது போக்குவதற்கு ஆண்ட்ராய்டு போன் போன்ற பல டெக்னாலஜிகல் இருக்கிறது. இதனால் குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரு வட்டத்துக்குள்ளேயே முடிந்து போய்விடுகிறது. ஆனால் தொண்ணூறுகளில் வாய்ந்த குழந்தைகள் அப்படி அல்ல.

செல்போன் போன்ற எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் தூர்தர்ஷன் என்ற சேனல் மட்டுமே இருக்கும். அதிலும் பெரும்பாலான வீடுகளில் டிவி என்பதே கிடையாது. இதனால் அப்போது இருந்த குழந்தைகள் பக்கத்து வீடுகளில் சென்று தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்ப்பார்கள்.

அப்படி குழந்தைகளை ஈர்த்த ஒரு நிகழ்ச்சிதான் சக்திமான். இந்தி நடிகர் முகேஷ் கான் அந்த சக்திமான் கேரக்டரில் நடித்திருப்பார். சுருக்கமாகச் சொன்னால் இப்பொழுது குழந்தைகள் விரும்பும் ஸ்பைடர்மேன் போல அப்போது இருந்த குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோ சக்திமான். இந்த சீரியலை பார்ப்பதற்கு வீடுவீடாகச் சென்ற குழந்தைகளும் உண்டு.

அதில் சக்திமான் செய்யும் பல சாகசங்களை குழந்தைகள் நிஜ வாழ்வில் செய்து பார்த்த சம்பவங்கள் நிறைய இருக்கிறது. அதன் பிறகு காலப்போக்கில் பல சேனல்களின் வரவால் அந்த நிகழ்ச்சியும் முடிவு பெற்றது. நீண்ட காலத்திற்கு பிறகு கடந்த லாக் டவுனில் இந்த நிகழ்ச்சி மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது இந்த நிகழ்ச்சிக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைப்பார்த்த முன்னணி நிறுவனமான சோனி தயாரிப்பு நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒரு படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சோனி நிறுவனம் ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளது.

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அவெஞ்சர்ஸ் படம் போன்று சக்திமான் படமும் வரப்போகிறது. இதனால் 90ஸ் கிட்ஸ்கள் அனைவரும் சக்திமானை திரையரங்குகளில் காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News