பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. தன்னுடைய கலகலப்பான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவது இவருடைய தனி சிறப்பு. இதனால் அவரை பல நிகழ்ச்சிகளிலும் நம்மால் காண முடியும்.
இவ்வளவு ரசிகர்களை கொண்ட அம்மணிக்கு நாம் எதிர்பார்க்காத ஒரு மறுபக்கமும் இருக்கிறது. அது என்னவென்றால் அவர் சதா நேரமும் சரக்கு அடித்துக் கொண்டு முழு போதையில் தான் இருப்பாராம்.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது கூட குடிபோதையில் தள்ளாடி கொண்டு தான் வருவாராம். அவருடைய இந்த நடவடிக்கையால் பல முறை ஷூட்டிங் தடைப்பட்டு நின்ற சம்பவங்களும் நடந்தேறியுள்ளது.
அது மட்டுமல்லாமல் வாய்ப்பு கொடுப்பதாக கூறி சில தயாரிப்பாளர்களும், அம்மணியை நெருங்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அம்மணி அதற்கு இடம் கொடுக்காமல்உஷாராக எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
தற்போது அம்மணி அந்த பழக்கங்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு சமர்த்து பிள்ளையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இப்போது அம்மணி தான் பிரபல தொகுப்பாளினியாக முதலிடத்தில் இருக்கிறார்.