விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. அதில் பாக்யாவின் புருஷன் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாக்யாவை விட்டு பிரியும் முடிவில் இருக்கிறார்.
இதனால் பாக்யாவுக்கு தெரியாமல் ஒரு பேப்பரை கொடுத்து அதில் கையெழுத்திட சொல்கிறார். அது விவாகரத்து பத்திரம் என்று தெரியாமல் பாக்கியாவும் தன் புருஷனை நம்பி அதில் கையெழுத்து போடுகிறார். இப்படி பல திருப்பங்களுக்கு இடையில் அடுத்த புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதில் உடம்புக்கு முடியாமல் இருக்கும் பாக்யாவின் மாமனாரை குடும்பத்தினர் அனைவரும் நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். அவரின் மனசு கஷ்டப்பட கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கின்றனர்.
அதிலும் பாக்கியா தன் மாமனாருக்கு சாப்பாடு ஊட்டுவது, பாத்ரூம் போக உதவி செய்வது என்று பல வேலைகளை எந்த சங்கடமும் இல்லாமல் செய்கிறார். இதனால் பாக்கியாவை நினைத்து அவருடைய மாமனார் மற்றும் மாமியார் இருவரும் பெருமைப்படுகின்றனர்.
மேலும் பாக்கியா அவர்களிடம் என் அப்பாவாக இருந்தால் நான் செய்ய மாட்டேனா என்று சொல்லி கண் கலங்குகிறார். பெத்த பிள்ளையே செய்யத் தயங்கும் ஒரு வேலையை முகம் சுளிக்காமல் செய்யும் பாக்கியாவுக்கு, கோபி இவ்வளவு பெரிய துரோகம் செய்வது அவரின் மாமனாரை ரொம்பவும் வாட்டுகிறது.
இப்படி ரொம்ப உணர்ச்சி பூர்வமாக இருக்கும் இந்த ப்ரோமோ அனைவரையும் கவர்ந்து விட்டது. இந்த சம்பவத்தின் மூலம் பாக்கியாவை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் மாமியார் கூட பாக்யாவின் பக்கம் நிற்கிறார்.
இதனால் விவாகரத்து செய்தியை கோபி அறிவிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த குடும்பமே அவருக்கு எதிராக நிற்கும் என்று தெரிகிறது. வரும் வாரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இதுபோன்ற காட்சிகள் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த காட்சிகளை காண தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.