வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

டாக்டர் அங்கிளை விடாமல் துரத்தும் லட்சுமி.. கண்ணம்மாவிடம் வசமாக சிக்க போகும் பாரதி

விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மாவில் இந்த வாரம் கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு களை கட்ட போகிறது. இதற்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதில் தன் அம்மாவின் பிறந்தநாள் அன்று வரப்போகும் தன் அப்பாவை வரவேற்க குழந்தை லக்ஷ்மி ஆவலுடன் காத்திருக்கிறது. மேலும் தன் அப்பாவைப் பற்றி டாக்டர் அங்கிள் பாரதிக்கு தெரியும் என்பதால் ஒவ்வொரு தடவையும் பாரதிக்கு போன் போட்டு தன் அப்பாவை பற்றி விசாரிக்கிறார்.

இந்நிலையில் பிறந்தநாளுக்கு வரப்போகும் தன் அப்பாவுக்காக லட்சுமி புது டிரஸ் எடுக்க ஆசைப்படுகிறார். அதை பாரதியிடம் காட்டி அப்பாவுக்கு எந்த சைஸ் கரெக்டாக இருக்கும் என்று நீங்கள் செலக்ட் பண்ணுங்கள் என்று சொல்கிறார்.

இதனால் கடுப்பாகும் பாரதி இருப்பதிலேயே பெரிய அளவு சட்டையை எடுத்து இதுதான் உங்க அப்பாவுக்கு சரியாக இருக்கும் என்று சொல்கிறார். அவ்வளவு பெரிய சட்டையை பார்த்த குழந்தை எங்க அப்பா இவ்வளவு பெருசா இருப்பாரா என்று பரிதாபமாக இருக்கிறது.

இதற்கு பாரதி ஆமாம் இதுதான் உங்க அப்பாவுக்கு சரியாக இருக்கும் என்று சொல்வதைப் பார்த்து மொத்த குடும்பமும் கடுப்பாகிறது. பாரதி செலக்ட் செய்த சட்டையை எடுத்து கொண்டு போகும் லக்ஷ்மி அதை தன் அம்மாவிடம் காட்டுகிறார்.

மேலும் லக்ஷ்மி தன் அம்மாவிடம் டாக்டர் அங்கிள் ஏன் இந்த சட்டையை எடுத்து கொடுத்தார் என்று கேட்கிறார். அதற்கு கண்ணம்மா அவருக்கு கொழுப்பு அதிகமா ஆயிடுச்சு என்று சொல்கிறார். இதை வைத்து பார்க்கும் பொழுது கண்ணம்மா தன்னுடைய பிறந்த நாளில் பாரதியை சிக்க வைக்க பலமான திட்டமொன்றை போட்டுள்ளார் என்று தெரிகிறது.

பாரதிகண்ணம்மா சீரியல் சில வாரங்களாக சுவாரஸ்யம் கம்மியாக இருந்தாலும் கண்ணம்மாவின் பிறந்தநாளன்று நடக்கப்போகும் அந்த டிவிஸ்டை காண ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

Trending News