சில நாட்களாக தனுஷ், பிரபல நடிகை போன் செய்தால் அந்த போனை எடுக்கவே தயங்குகிறார் என்ற தகவல் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கசிந்து வைரலாகி வருகிறது. கேட்டால் எரிகிற நெருப்பில் இவள் வேறு எண்ணையை ஊற்றுகிறாள் என கடுப்பில் இருக்கிறாராம்.
தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து உலகம் அறிந்ததே. ஆனால் அவர்கள் ஏன் விவாகரத்து செய்தார்கள் என்ற உண்மை காரணம் தற்போது வரை தெரியவில்லை. அது வெளி வரவும் வாய்ப்பு இல்லை. ஆனால் சமூக வலைதளங்களில் தனுஷுக்கு மற்ற நடிகைகளுடன் தொடர்பு இருப்பதால் தான் ஐஸ்வர்யா கோபப்பட்டு இந்த முடிவை எடுத்தார் என்கிறார்கள்.
இன்னும் சிலரோ ரஜினி குடும்பத்திற்கும் தனுஷுக்கும் செட்டாகவில்லை என்றும் கூறுகின்றனர். இப்படி ஒரு பெரிய பிரச்சனை சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தினமும் தனுசுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் பிரபல நடிகை ஒருவர் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் அரசல்புரசலாக வெளியாகியுள்ளது.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்காக திருமணம் செய்து கொண்டு செட்டிலாக இருந்த நடிகை சொந்த தயாரிப்பில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் தனுஷ். ஆனால் அந்த நடிகையின் நேரமோ என்னமோ இந்த படத்தில் நடித்த பிறகு அவருக்கு விவாகரத்து ஏற்பட்டுவிட்டது. அதற்கு காரணம் தனுஷ் தான் என தற்போது வரை ஒரு தகவல் இணையத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விவாகரத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அந்த நடிகையை தனுசுக்கு ஆறுதல் சொல்கிறேன் என அவ்வப்போது போன் செய்கிறாராம். ஏற்கனவே பிரச்சனை சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இது வேறயா என இனிமேல் கொஞ்ச நாளைக்கு போன் செய்ய வேண்டாமென கட் அண்ட் ரைட்டாக சொல்லி கட் செய்து விட்டாராம் தனுஷ்.
அந்த நடிகைக்கு தனுஷ் மீது ஆரம்பத்திலிருந்தே ஒரு கண் இருப்பதாகவும் எப்படா கேப் கிடைக்கும் புகுந்து விடலாம் என ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளதாகவும் எப்போது கமண்ட் கொடுத்தாலும் சிட்டாகப் பறந்து வந்து விடுவார் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். அந்த நடிகையாக யாராக இருக்கும்? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.