மீண்டும் விபரீத ஆசையில் அட்லீ.. பட்ட காயமே இன்னும் ஆறல, அதுக்குள்ள இப்படி ஒரு ஆசையா!

தமிழ் சினிமாவில், இயக்கிய முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் அட்லீ. இவர் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான மேக்கிங் ஸ்டைலை காட்டி படத்தை 100 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓட வைப்பார்.

மேலும் அட்லீ மற்றும் தளபதி விஜயின் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் அமோக வெற்றியைப் பெற்றது. எனவே இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசையை அட்லீ, ஜீவா நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை ஏ ஃபார் ஆப்பிள் (A for Apple) என்ற அட்லீயின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளியிட்டார்.

இவ்வாறு இயக்குனராக இருந்த அட்லீ தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் தன்னுடைய முத்திரையைப் பதித்தார். இருப்பினும் அட்லீ தயாரித்த முதல் படத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் மீண்டும் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்திருக்கிறது.

இதனால் தற்போது அட்லீ அதிக பொருட்செலவில் இயக்கிக் கொண்டிருக்கும் முதல் படமான ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ என்ற படத்தினை முடித்துவிட்டு விரைவில் அட்லீயின் தயாரிப்பில் புது படத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்.

ஏற்கனவே அட்லீ தயாரித்த முதல் படம் படுதோல்வியை சந்தித்ததும், மீண்டும் தன்னுடைய விபரீத பேராசையால் முன்னணி தயாரிப்பாளராக வேண்டும் என்ற அட்லியின் முடிவு தற்போது கோலிவுட்டில் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி அட்லீ இயக்கும் ஒவ்வொரு படத்தையும் தழுவல் செய்யப்பட்டிருக்கிறது என குற்றம் சாட்டப் படுவதால், படத்தை இயக்கினால் தானே இந்தப் பிரச்சனை வரும் பேசாமல் தயாரித்து விடலாம் என அட்லீ முடிவெடுத்து விட்டாரா என்றும் சிலர் கிண்டல் அடிக்கின்றனர்.