தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய விவாகரத்து பற்றிய அறிவிப்பை கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது நடந்து பல நாட்கள் கடந்த பிறகும் ஊடகங்களில் இன்னும் அவர்கள் பிரிவு பற்றிய செய்திதான் பிரபலமாக இருக்கிறது.
அவர்களுடைய இந்த முடிவால் ரஜினியின் ரசிகர்கள் உட்பட பலரும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க அவர்களுடைய குடும்பத்தினர் முயற்சி செய்து வருவதாகவும், இதனால் கூடிய விரைவில் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து விடுவார்கள் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது.
இது ஒருபுறமிருக்க தற்போது ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தினமான நேற்று ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் ஹார்ட் வடிவ கேக் ஒன்று இருக்கிறது. அந்த கேக்கின் மேல் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்று எழுதப்பட்டுள்ளது.
தற்போது ஐஸ்வர்யா காதலர் தின சிறப்பாக ஒரு ஆல்பம் சாங் இயக்கி வருகிறார். அந்த டீமில் உள்ள நபர்கள் தான் இந்த சர்ப்ரைஸை உருவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஐஸ்வர்யா காதலர் தினத்தை தன்னுடைய கணவர் தனுஷுடன் சிறப்பாக கொண்டாடினார்.
ஆனால் இந்த வருடம் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் தனுஷ் இந்த விவகாரத்து அறிவிப்பு வெளியான பிறகு யாரிடமும் சரியாக பேசுவதில்லை. அவர் கலந்து கொள்ளும் படப்பிடிப்பில் கூட சோகமே உருவாக தான் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாரும் இந்த செய்தியால் கடும் மன உளைச்சலில் தான் இருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா இந்த காதலர் தினத்தை இவ்வாறு கேக் வெட்டி கொண்டாடியது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் அவர்கள், நீங்கள் அடுத்த வருடம் எங்கள் தனுஷ் அண்ணாவுடன் இந்த காதலர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று அவருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவாகரத்து அறிவிப்பு தனுஷுக்கு தான் வேதனையை கொடுத்துள்ளது.
ஆனால் அவருடைய மனைவி ஐஸ்வர்யா வழக்கத்தைவிட சந்தோஷமாகத் தான் இருக்கிறார். விவாகரத்து விஷயத்தில் தனுஷ் தற்போது சந்தோசமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் உண்மையான சந்தோஷம் யாருக்கு என்று கேள்விக்குறியில் உள்ளனர் ரசிகர்கள்.