நடிகர் விஜய் சேதுபதி மிகக்குறுகிய காலத்திலேயே மக்கள் செல்வனாக ரசிகர் மனதில் இடம்பிடித்துவிட்டார். ஆரம்பத்தில் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபகாலமாக ரஜினி, விஜய், கமல் ஆகியோருக்கு வில்லனாகவும் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.
பல முன்னணி நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தயங்கினாலும் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர் மத்தியில் பாராட்டைப் பெற்றார். ஆனால் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள்.
ஆனால் கடந்த ஆண்டு மட்டுமே விஜய் சேதுபதிக்கு பல படங்கள் வெளியானது. அதில் விஜய்க்கு, வில்லனாக மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் விஜய் சேதுபதியின் மற்ற படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
விஜய் சேதுபதி எந்த இயக்குனர் வந்து கால்ஷீட் கேட்டாலும், எப்ப வேண்டுமானாலும் பண்ணிக்கலாம் என உடனே ஓகே சொல்லி விடுவாராம். மற்ற நடிகர்கள் கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் நிலையில் இவர் எல்லா படத்தையும் ஓகே சொல்லி நடிப்பதால் ஒரு வருடத்திற்குள் பல படங்கள் விஜய் சேதுபதிக்கு வெளியாகிறது.
அதே போல தான் மக்கள் நாயகன் ராமராஜன் எந்த படம் வந்தாலும் உடனே ஓகே சொல்லி விடுவாராம். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவர் நடித்த கரகாட்டக்காரன், நம்ம ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது. 1988 ஆம் ஆண்டு ராமராஜனுக்கு 8 படங்கள் வெளியானது. அதேபோல் அதற்கு அடுத்த ஆண்டு 1989 லும் எட்டு படங்களில் நடித்திருந்தார்.
ராமராஜன் நம்முடைய மார்க்கெட் இருக்கும் பொழுது கதை பிடித்து இருக்கோ, இல்லையோ பல படங்களில் நடித்து பணத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என ஒரு வருடத்திற்கு உள்ளே பல படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது ராமராஜன் போலவே விஜய் சேதுபதியும் பல படங்களில் நடித்து வருகிறார்.