வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அப்பாவுக்கு பொண்ணு தப்பாம இருக்கு.. பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த காதல் ஜோடி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் கணவர் கோபி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, விவாகரத்து ஆன ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பாக்யாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளார்.

இந்நிலையில் கோபியில் அப்பாவிற்கு பக்கவாதம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்காக மருத்துவமனையில் இருந்து அனுப்பிய டாக்டர் ரஜினி என்பவருடைய பேச்சும் ஸ்டைலும் கோபியின் மகள் இனியாவிற்கு பிடித்துவிடுகிறது.

இதனால் ரஜினி வீட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும் இனியா தன்னை அழகு படுத்திக் கொண்டு, ரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறார். இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ரஜினி கோபியில் அப்பாவிற்கு பிசியோதெரபி ட்ரீட்மென்ட் செய்து கொண்டிருக்கும்போது இனியா,ரஜினியை பார்த்து வித்தியாசமாக நடந்து கொள்வதை ஜெனி பார்த்துவிடுகிறார்.

இதன்பிறகு ஜெனி, ரஜினியிடம் இருந்து இனியாவை தூரமாக அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். இருப்பினும் அதே இடத்தில் இருக்க விரும்பும் இனியா, ரஜினியுடன் பேச பழக முயற்சிக்கிறார். டீன் ஏஜ் வயதில் இதெல்லாம் சகஜம் என்று ஜெனி இனியாவிற்கு அறிவுரை கூறி இந்த விஷயத்தை பாக்யாவிடம் தெரியப்படுத்தாமல் அவரே பக்குவமாகப் பேசி முடித்து விடுகிறார்.

இதன்பிறகு இனியா ரஜினியிடம் ஒரு நண்பரைப் போல் பழகி, தனக்கு ஏற்பட்ட மாற்றம் தவறானது என்பதைப் புரிந்து கொள்ள சிங் ஜெனி உதவியாக இருக்க போகிறார். இருப்பினும் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் ரஜினி-இனியா இருவரும் தான் அடுத்த காதல் ஜோடி என்றும் கிண்டல் அடிக்கின்றனர்.

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. இனியா, ரஜினியை அண்ணா என்று தொடக்கத்திலேயே கூறிவிட்டதால் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் இனியாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் இவ்வளவு சீக்கிரம் ஜோடி கொடுக்க மாட்டார்கள்.

Trending News