வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அடுத்தவ புருஷனுடன் ஊர் சுற்ற ஆசைப்படும் வெண்பா.. என்ன DNA டாக்டர் ஒன்னுகே முடியல இதுல ரெண்டு பேரா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களாக தன்னுடைய தகப்பன் யார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கும் கண்ணம்மாவின் மகள் லட்சுமிக்கு, கண்ணம்மாவின் பிறந்தநாளன்று அவளுடைய அப்பாவை காட்டப் போவதாக கண்ணம்மா லட்சுமிக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்.

இதனால் கடந்த இரண்டு வாரங்களாகவே கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதற்காக கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு பாரதியை எப்படியாவது அழைத்து வர வேண்டும் என்று சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா இருவரும் முடிவெடுத்து பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் இதற்கெல்லாம் பிடிகொடுக்காத பாரதி, தன்னுடைய மகள் ஹேமாவை அழைத்துக்கொண்டு ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருக்கிறார். இந்த விஷயத்தை வெண்பாவிடம் பாரதி சொல்ல, அதைக்கேட்ட பிறகு வெண்பா ‘நல்ல முடிவு பாரதி, நீ இங்கேயே இருந்தால் எப்படியாவது உன்னை கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவிற்கு கலந்து கொள்ள வைத்து விடுவார்கள்’ என்று வெண்பா கூற அதன்பிறகு பாரதி, அதற்காக டிக்கெட் இரண்டு புக் செய்து விட்டேன் நீயே பாரு என்று வெண்பாவிடம் கொடுக்கிறார்.

இதனைப் பார்த்த வெண்பா மற்றொரு டிக்கெட் தனக்குத்தான் என்ற ஆசையில் ஆர்வத்துடன் அந்த டிக்கெட்டை வாங்குகிறார். அதன்பிறகு பாரதி, ‘இன்னொரு டிக்கெட் உனக்கல்ல என்னுடைய மகள் ஹேமாவிற்கு’ என்று வெண்பாவிற்கு பாரதி செம பல்பு கொடுக்கிறார்.

ஏற்கனவே இது போன்று பாரதி வீட்டில் இருப்பவர்களிடம் கோபித்துக்கொண்டு ஹேமா உடன் அமெரிக்கா கிளம்பினான். ஆனால் திடீரென்று ஹேமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையிலேயே தங்கி விட்டார். தற்போது ஹைதராபாத்திற்கு கிளம்ப திட்டமிட்டிருக்கும் பாரதியிடம் ஹேமா, கண்டிப்பாக சமையல் அம்மா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான் இருக்கவேண்டும் என்று அடம் பிடித்து மீண்டும் பாரதியை சென்னையிலேயே இருக்க வைத்து, அதன் பிறகு கண்ணம்மா பிறந்தநாள் விழாவிற்கு வர வைக்க உள்ளனர்.

இந்த சமயத்தில் வெண்பாவின் சித்தப்பா போன் செய்து பாரதியிடம் எல்லா உண்மையும் போட்டு உடைக்க உள்ளார். அதன்பிறகு பாரதியே லட்சுமியிடம் நான்தான் உன்னுடைய அப்பா என்பதை தெரியப்படுத்தி அதன்பிறகு பிரிந்து இருந்த பாரதி, கண்ணம்மா இருவரும் அவர்களது இரு மகள்களுடன் ஒரே குடும்பமாக சௌந்தர்யா வீட்டில் இணைந்து வாழ போகின்றனர்.

Trending News