தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் சிவகுமார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அனைவரும் கூறும் அளவிற்கு யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலை திடகாத்திரமாக வைத்திருக்கக் கூடியவர். இவருடைய மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவில் முக்கிய நடிகர்களாக உள்ளார்கள்.
இந்நிலையில் கார்த்தி, நாகர்ஜுன், தமன்னா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தோழா. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கியிருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வெற்றி பெற்றது.
தோழா படத்தின் கதையை இயக்குனர் வம்சி கார்த்தியிடம் மட்டும் ஏழு முறை சொல்லி உள்ளாராம். ஆரம்பத்தில் கார்த்தி இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு இயக்குனரை சுற்ற விட்டுள்ளார். பின்பு ஏழாவது முறை கதை கேட்ட பின்புதான் தோழா படத்தில் நடிக்க கார்த்தி ஒப்புக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வம்சி சிவக்குமாரிடம் ஒரு முறையும், சூர்யாவிடம் ஒரு முறையும் தோழா படத்தின் கதை சொல்லியுள்ளார். இதுபோக சிவக்குமார் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து உறவுக்காரர்களை வரச்சொல்லி அவர்களிடமும் படத்தின் கதையை சொல்ல சொல்வாராம்.
வம்சியும் என்ன செய்வதென்று தெரியாமல் சிவகுமாரின் சொந்தக்காரர்கள் அனைவரிடமும் தோழா படத்தின் கதையை கூறியுள்ளார். அப்போதுதான் ஏ கிளாஸ், பி கிளாஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் கதையாக பிடிக்கிறதா என்பதை பார்ப்பதற்காக சிவக்குமார் இதுபோன்று செய்வாராம்.
இதனால் தோழா படத்தின் கதையை சிவக்குமாரின் குடும்பத்திற்கு சொல்லிய அலுத்துப் போய் இருந்தார் இயக்குனர் வம்சி. இதனாலே பல இயக்குனர்களும் சிவகுமார் குடும்பத்திற்கு படத்தின் கதையை சொல்ல தயங்குகிறார்கள்.