அவர் படத்தையே தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. தூண்டிலை போட்டு காத்து கொண்டிருக்கும் விக்ரம் பட தயாரிப்பாளர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கோப்ரா படத்தை லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கேஎஸ் ரவிக்குமார், பத்மப்ரியா ஜானகிராமன், மியா, இர்பான் பதான், கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கோப்ரா படத்தில் விக்ரம் 20க்கு மேற்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டது. அதன் பிறகு மிகப்பெரிய பட்ஜெட்டில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. இப்படத்திற்கு ஒதுக்கிய பட்ஜெட்டை விட பல மடங்கு செலவாகி உள்ளது.

கோப்ரா படத்திற்கு கிட்டத்தட்ட 87 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார் லலித்குமார். விக்ரமின் ஐ படத்தைவிட கோப்ரா படத்தின் பட்ஜெட் தாண்டி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளதாக சமீபத்தில் கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கோப்ரா படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என உறுதியாக உள்ளாராம் தயாரிப்பாளர். ஏனென்றால் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதை அவ்வளவு விலை கொடுத்து யாரும் ஓடிடியில் வாங்க மாட்டார்கள்.

இதனால் கோப்ரா படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால்தான் போட்டா முதலயும், லாபத்தையும் பெற முடியும் என்பதால் திரையரங்கில் தான் படத்தை வெளியிடுவேன் என தயாரிப்பாளர் அடம் பிடித்து வருகிறார். இந்நிலையில் தியேட்டர் ரிலீஸ்காக கோப்ரா படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் காத்திருக்கிறார்.