தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் அந்த காமெடி நடிகர். அவருடைய காமெடிக்காக மட்டும் ஓடிய திரைப்படங்கள் ஏராளம். இதனால் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் ஒரு நடிகராக அவர் உருவெடுத்தார்.
தனக்கு இருக்கும் அந்த பாப்புலாரிட்டியை பயன்படுத்திக் கொண்ட நடிகர் தான் நடிக்கும் படங்களில் தனக்குப் பிடித்த நடிகைகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கண்டிஷன் போடுவாராம். இதுபோன்ற கண்டிஷன்களை எல்லா நடிகர்களும் செய்வது கிடையாது.
சில குறிப்பிட்ட பெரிய நடிகர்கள் மட்டுமே தங்களுக்கு ஜோடியாக யார் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். அப்படியிருக்கும்போது இந்த காமெடி நடிகர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தனக்குப் பிடித்த பல நடிகைகளை தான் நடிக்கும் படங்களில் நடிக்க வைத்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த நடிகைகள் அந்த நடிகருடன் காட்டும் நெருக்கம் தான் இதற்கு முக்கிய காரணமாம். இப்படி அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த நடிகைகள் ஏராளம். அதில் சில மூத்த நடிகைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகரின் பார்வை ஒரு இளம் நடிகையின் மேல் திரும்பியுள்ளது.
தற்போது நடிகர் நடித்து கொண்டிருக்கும் புதிய படத்தில் அந்த இளம் நடிகை தான் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று ரொம்ப பிடிவாதமாக இருக்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்களும் வேறு வழியில்லாமல் பல லட்சங்களை கொட்டி நடிகையை புக் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அவர் தற்போது ஒரு சில பெரிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த நடிகை இவரிடம் மாற்றிக்கொள்ள போகிறாரே என்று பலரும் ஆதங்கப்படுகின்றனர்.