வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இனி ரஜினி,விஜய்யை நம்பினால் வேலைக்காகாது.. நான் சுயம்புடா என முருகதாஸ் கையில் எடுத்த ஆயுதம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இவர் அஜித்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். தளபதி விஜயுடன் இணைந்து துப்பாக்கி, சர்கார் என மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அதேபோல் சூப்பர் ஸ்டாருடன் தர்பார் படத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

முருகதாஸ் இயக்குனரை தாண்டி தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மான் கராத்தே, ரங்கூன் போன்ற பல படங்களை தயாரிப்பு நிறுவனம் மூலம் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

தற்போது முருகதாஸ் தன்னுடைய அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இப்படத்தை இவர் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இப்படத்தை ஏஆர் முருகதாஸின் உதவியாளர் பொன்குமார் இயக்க உள்ளார்.

இப்படம் நகைச்சுவை கலந்த இந்தியன் ஃபேன்டஸி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளது. இதனால் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ஒரு புதுமுக நடிகை அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படக்குழுவினர் பூஜையில் கலந்துகொண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் யாரும் தற்போது ஏ ஆர் முருகதாஸ்க்கு வாய்ப்பு கொடுப்பது போல தெரியவில்லை முக்கியமாக ஒருகட்டத்தில் தூக்கி விட்ட விஜய் கூட தற்போது கண்டு கொள்ளவில்லையாம். ஏற்கனவே ரஜினி, விஜய், மகேஷ்பாபு போன்ற முன்னணி நடிகர்களிடம் கதை கூறிவிட்டு காத்துக்கொண்டு இருக்கிறார் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் தன்னுடைய இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் மூலம் மக்களை திருப்திப்படுத்த முயற்சிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Trending News