ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உலகளவில் திரும்பி பார்க்க வைத்த 2 இயக்குனர்கள்.. தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய படங்கள்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில் பல புதுமையை புகுத்தி நம்மை கவர்ந்து வருகின்றனர். அதிலும் சில இயக்குனர்கள் மிகக்குறுகிய காலத்திலேயே உலக அளவில் அனைவரையும் ஈர்க்கும் அளவுக்கு தரமான படங்களை கொடுத்து இருக்கின்றனர். அப்படி நம் தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடிக் கொடுத்த இரண்டு இயக்குனர்கள் பற்றிக் காண்போம்.

பார்த்திபன்: புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் நம்மை ஒவ்வொரு படத்திலும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அப்படி அவர் நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, இவரால் மட்டும் தான் இது சாத்தியமாகும் என்று நினைக்கும் அளவுக்கு ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தை நமக்கு கொடுத்தார்.

இந்த படம் முழுக்க ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே பயணிக்கும். இதைப் பார்க்கும் நமக்கு சலிப்பு தட்டி விடக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டு அதை நிகழ்த்திக் காட்டியவர் பார்த்திபன். இப்படி ஒரு சவாலான கதையை இயக்கி, நடித்து, தயாரித்து வெளியிடுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். இந்தோனேஷியா நாட்டைச்சேர்ந்த மகாசார் என்ற மொழியில் ஒத்த செருப்பு படத்தை இயக்க உள்ளனர் என்பது பெருமிதம் தான்.

அதை பார்த்திபன் மிகவும் அசால்ட்டாக நடத்திக்காட்டி சாதனை படைத்தார். இதற்காக அவர் நேஷனல் பிலிம் ஸ்பெஷல் ஜூரி அவார்டை பெற்றார். அது தவிர ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இருந்த இந்தப் படம் நாமினேட் ஆகாமல் போனதுதான் சோகம். எப்படியும் ஆஸ்கர் அவாடை பெற்றே தீர்வது என்று அவர் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தியாகராஜன் குமாரராஜா: ஆரண்ய காண்டம் என்ற அவரின் முதல் திரைப்படத்திலேயே நம்மை திரும்பி பார்க்க வைத்தவர். முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதனால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இவர் உருவெடுத்தார்.

அதைத் தொடர்ந்து இவர் விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், சமந்தா மற்றும் பலரை வைத்து இயக்கிய திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்தத் திரைப்படமும் அவருடைய முந்தைய திரைப்படம் போலவே பல விருதுகளை தட்டிச் சென்றது.

மேலும் இந்த படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News