இளையராஜா அன்னக்கிளியில் ஆரம்பித்து இன்றுவரை தன் இசையால் இசை ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார் . இவர் அமைத்த இசை மெட்டுக்கள் இன்று வரை புதுமை மாறாமல் புத்துணர்வோடு இருந்து வருகிறது.
ஒரு காலத்தில் இளையராஜா இசை என்றாலே போதும் படம் ஹிட்டாகி விடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு ஒவ்வொரு இயக்குனர்களும் இளையராஜாவின் இசைக்காக அவரது ஸ்டுடியோவிற்கு வெளியே காத்துக் கிடப்பார்கள். அந்த நேரத்தில் இளையராஜா சொல்வதுதான் பாடல் தருணம், இந்த இடத்தில்தான் பின்னணி இசை வரவேண்டும் ,
இந்த இடத்தில் மௌனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகின்ற ஒவ்வொரு குறிப்புகள் தான் அந்த படத்தை முழுமையாக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.இயக்குனர்களும் அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு செய்தும் இருக்கின்றனர்.அதில் இயக்குனர் மணிரத்தினம் முரண்டு பிடித்ததால் தான் நமக்கு ஏ.ஆர்.ரகுமான் கிடைத்தார்.
ஏ.ஆர்.ரகுமான் காலம் மேல்நோக்கி வந்தாலும், அந்த நேரத்திலும் சரி அதன் பிறகும் சரி அவருக்கு போட்டி என எவரும் இல்லாததால் தன்னை ஒரு தனிக்காட்டு ராஜாவாகவே இளையராஜா நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு இந்த திமிரு இருப்பதில் தவறில்லை என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அதிகமாக கம்ப்யூட்டர் இசைகளை இசைக்கின்றனர். இன்றைய இசையமைப்பாளர்கள் என்று தொடர்ந்து அவர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பார். அது போல, தான் அமைத்த மெட்டுக்களை தான் தற்போது இசைக்கக் கூடிய இசை அமைப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறிக் கொண்டிருப்பார்.
ஆனால் அதே சமகாலத்தில் இசையமைக்கும், அவரது மகனான யுவன்சங்கர் ராஜா பற்றி எந்த குறையும் இதுவரை இளையராஜா வாயிலிருந்து வந்தது இல்லை. ஆனால் பல படங்களில் இளையராஜாவின் இசையை திருடிதான் யுவன் சங்கர் ராஜா புது இசை அமைத்திருப்பார்.
சூப்பர் டீலக்ஸ் டிக்கிலோனா போன்றப் படங்களில் யுவன் சங்கர் ராஜா அவர் அப்பா இளையராஜா போட்ட பாட்டை அப்படியே மெட்டு மாறாமல் புதிதாக மாற்றி வெளியிட்டு இருப்பது குறித்து இளையராஜா கண்டுகொண்டதாக தெரியவில்லை. தன்னுடைய மகன் என்ற காரணத்தினால் அதை பற்றி இளையராஜா வாயை திறக்கவில்லை.
ஆனால் ஊரில் உள்ள இசையமைப்பாளர்களை எல்லாம் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்து விடுவார் . அவர் இப்போது வரை தான் அமைக்கும் இசைக்கு ஏற்ற உண்மையான வாத்தியங்களை பயன்படுத்தி தான் இசையமைத்து வருகிறார். தற்போது இருக்கக்கூடிய ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்து அனிருத் வரை அனைவரும் கம்ப்யூட்டரை நம்பியே இசை அமைக்கின்றனர்.
எனவே , அவர்களை எல்லாம் மியூசிக் கம்போசர் என்றுதான் கூறவேண்டும் என்னை மட்டும் தான் மியூசிக் டைரக்டர் என்று சொல்ல வேண்டும் என்று எப்போதும் இளையராஜா சொல்வதுண்டு. அவரின் திறமைக்கு ஏற்றவாறு அவருக்கு கர்வமும் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் என்ன ராஜா சார்..? ஊருக்கு ஒரு நியாயம், பெத்த பிள்ளைக்கு ஒரு நியாயமா..?