வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பைத்தியம் என திட்டிய வனிதா, திரும்ப அசிங்கப்படுத்திய தாமரை.. எதிர்பார்த்த தரமான சம்பவம் வந்துருச்சு மக்களே

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தாமரைச்செல்வி மற்றும் வனிதா இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தாமரை மற்றும் வனிதா இருவருக்கும் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டு வந்தது.

தாமரைச்செல்வி உடன் அவ்வப்போது பாலாஜி முருகதாஸும் சேர்ந்து கொள்வார். எனவே வனிதாவிற்கு எதிராக குரல் கொடுக்கும் நபராக தாமரை மாறிவிட்டார். தற்போது தாமரைக்கும் வனிதாவிற்கும் இடையே சண்டை முற்றி இருவரும் ஒருவர் ஒருவரை தரக்குறைவாக பேசி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

இன்று பிக் பாஸ் பொம்மைகளை வைத்து ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார். அதில் தாமரை வனிதாவின் பொம்மையை லாபகரமாக எடுத்து விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த வனிதா தாமரையை பிராடு என்று திட்டுகிறார்.

அதன் பிறகு தாமரை, என்ன மயித்துக்கு என்ன பிராடுனு சொல்ற என வனிதாவிடம் சரிக்கு சரி பதில் பேசி அசிங்கப் படுத்துகிறார். பிக் பாஸ் வீடே இவர்களது சப்தத்தால் அதிருகிறது. வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களும் இவர்கள் போடும் சண்டையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அத்துடன் பிக்பாஸ் அல்டிமேட்டி ல் இருக்கும் போட்டியாளர்கள் வனிதாவிடம் வாயை கொடுத்து வம்பிழுத்துக்கக்கூடாது என பயந்து ஒதுங்கி இருக்கும் நிலையில், தாமரை கொஞ்சம் கூட பயமில்லாமல் சரி மல்லுக்கு சண்டை போடுகிறார்.

இந்தப் ப்ரோமோவை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் இவ்வளவு நாள் எதிர்பார்த்து காத்திருந்த தரமான சம்பவம் இன்று நிகழப்போகிறது என சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்கின்றனர். அத்துடன் சண்டை போடுவதற்காக வே வனிதா மற்றும் தாமரை இருவரையும் தயாரித்து உள்ளே அனுப்பியிருக்கிறார்கள் என்றும் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கேலி செய்கின்றனர்.

Trending News