கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜின் 14 வருடப் பகை.. தப்பான புத்தியில் தடுமாறிய சம்பவம்

கௌதம் வாசுதேவ் மேனனின் முதல் படம் மின்னலே. அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்திற்கு இசை அமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவருக்கும் இதுதான் முதல் படம். அந்தப் படம் இரண்டு பேருக்கும் பெரிய பெயரை வாங்கித் தந்தது.

அந்த படத்திற்குப் பின் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. அதற்கு காரணமாக ஒரு விஷயம் கூறப்படுகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் காசு விஷயத்தில் கொஞ்சம் கறாரான பேர்வழி. எண்ணி, எண்ணி பார்த்து செலவு செய்யக்கூடியவர்.

முதல் படம் மின்னலே, இவர்கள் இருவரின் கூட்டணியில் பாடலும், படமும் பட்டையைக் கிளப்பியது.இந்த வெற்றியால் இருவரும், ஒருவருக்கு ஒருவர் தற்பெருமையாக நடந்து கொண்டுள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனன், நாம் தாம் ஹாரிஸ் ஜெயராஜுக்கு இந்த படத்தின் மூலம் வாழ்க்கை கொடுத்திருக்கிறோம் என்றும், ஹாரிஸ் ஜெயராஜோ, நாம் போட்ட பாட்டில் தான் இந்தப் படம் ஹிட்டானது என்றும் மனதிற்குள் பெருமையாக நினைத்துள்ளனர்.

கெளதமோ நாம் வளர்த்துவிட்ட பையன் தான் என்று உரிமையோடு இந்த படத்திற்கான சம்பளத்தை ஏனோ, தானோ என்று கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் கூட்டணி அமைக்கவில்லை.

பல வருடங்கள் காத்திருப்பிற்கு பிறகு என்னை அறிந்தால் படத்தின் மூலம் இருவரும் கூட்டணி போட்டனர். அதுவும் தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க தானே தவிர அவர்கள் மனமொத்து ஒன்று சேரவில்லை.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →