தமிழ் சினிமாவில் தொட முடியாத அளவிற்கு முன்னேறி இருக்கும் இளைய தளபதி விஜய் நடித்த ஆரம்பகால திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. அப்படி அடி வாங்கிய இயக்குனர் ஒருவர் இயக்கத்தை விட்டு விட்டு அதன்பிறகு நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி சிறந்த குணச்சித்திர நடிகராக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மணிரத்னத்தின் உதவி இயக்குனராக இருந்த இயக்குனரும் நடிகருமான அழகம் பெருமாள் நம்பிநாதன் முதன்முதலாக 2001ஆம் ஆண்டு டும் டும் டும் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பிறகு 2003ஆம் ஆண்டு ஜூட், பிறகு அடுத்த ஆண்டே தளபதி விஜய் உடன் உதயா என்ற திரைப்படத்தை இயக்கி படுதோல்வியைச் சந்தித்தார். இவ்வாறு இயக்குனராக வரிசையாக அடிபட்ட அழகம்பெருமாள், இனி படங்களை இயக்க வேண்டாம் என படங்களை இயக்குவதை ஒதுக்கி படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார்.
அவ்வாறு அழகம்பெருமாள் அதன் பிறகு நடிகராக அலைபாயுதே, புதுப்பேட்டை, கற்றது தமிழ், கண்டேன் காதலை, ஆயிரத்தில் ஒருவன், கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்திலும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வர தொடங்கினார்.
தற்போது வரை வெளியாகிக் கொண்டிருக்கும் படத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி இயக்குனரை விட நடிகராக சினிமாவில் ஆழமாக கால் பதித்துள்ளார். தளபதி விஜய்யை வைத்து ஹிட் கொடுத்து, அதன் பிறகு முன்னணி இயக்குநர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒருசில இயக்குனருக்கு கிடைத்த அதிஷ்டம் அழகர் பெருமாளுக்கு அமையவில்லை.
இருப்பினும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடைய திறமையும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அழகர் பெருமாள் தன்னை வேறு விதத்தில் அடையாளப்படுத்திக் கொண்டது தற்போது சினிமா ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.