செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

உதயநிதியிடம் கொண்டு போன பஞ்சாயத்து.. விக்னேஷ் சிவன் செய்த படுபாதக செயல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இவர்களின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனர் லலித்குமார் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என லலித்குமார்க்கு பிரஷர் கொடுத்துள்ளார்.

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஆனால் காத்துவாக்குல 2 காதல் படம் நன்றாக வந்திருக்கிறது இதை நம்பி தான் நான் இருக்கிறேன் இதனால் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதேபோல் விஜய் சேதுபதியும், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் லலித்குமார் இடம் பிரஷர் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், உதயநிதி ஸ்டாலினிடம் இதுபற்றி பேசியுள்ளார்.

இதனால் எல்லா பக்கத்திலிருந்தும் பிரஷர் வந்ததால் வேறு வழியில்லாமல் லலித் தியேட்டர் ரிலீசுக்கு காத்துவாக்குல 2 காதல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இதனால் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி உள்ளது.

எனவே காத்துவாக்குல இரண்டு காதல் படம் ஏப்ரல் அல்லது மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோர் படம் நன்றாக வந்திருக்கிறது நல்ல லாபம் தரும் என கூறியதால் இப்படத்தை தியேட்டர் ரிலீஸ் செய்ய லலித் சம்மதித்துள்ளார். இதனால் படம் வெளியான பிறகு லாபத்தைப் பெற்றுத் தருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News