வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாக்கியலட்சுமி சீரியலில் எல்லைமீறும் இனியா.. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பொறந்திருக்கு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பக்கவாதம் ஏற்பட்ட  தாத்தாவிற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக  பாக்யாவின் வீட்டிற்கு  மருத்துவமனையில் இருந்து பிசியோதெரபி டாக்டர் ரஜினி வந்து செல்கிறார்.

ஒவ்வொரு முறையும் ரஜினி வீட்டுக்கு வரும்போது இனியா தன்னை அலங்கரித்துக் கொண்டு, ரஜினி கண் முன்பு தெரிவதுபோல் இருப்பதும், அவருடன் பேசிப் பழக முயற்சிப்பதும்  பாக்யாவின் மருமகள் ஜெனிக்கு தவறாக தெரிகிறது.

அத்துடன் ரஜினி ட்ரீட்மெண்ட் செய்து கொண்டிருக்கும் போது, யாருக்கும் தெரியாமல் ரஜினியை இனியா போட்டோ எடுத்ததை ஜெனி பார்த்து விடுகிறாள். அதன்பிறகு போனை புடுங்கி இந்த சமயத்தில் போன் தேவையா? என ஜெனி திட்டுகிறாள்.

பிறகு டாக்டர் வெளியே சென்ற பின், ‘இந்த வயதில் இப்படி மாற்றம் ஏற்படுவது சகஜம்தான். ஒருத்தர் வருவதற்காக காத்திருப்பதும், அவரிடம் வழிந்து பேசுவதும் நல்லாவா இருக்கு’ என்று இனியாவை ஜெனி திட்டுகிறாள்.

அப்போது இனியா, ‘இதையெல்லாம் சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் வேலையை போய் பாருங்கள்.’ என எடுத்தெறிந்து பேசுகிறாள். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பாக்யா இதையெல்லாம் பார்த்து கடும் கோபத்தில் இனியாவை கன்னத்தில் அறைந்து,  ஜெனியிடம் இப்படியெல்லாம் பேசுவது தவறு என இனியாவிற்கு புரியவைக்கிறார்.

இருப்பினும் இனியா, அந்த சமயத்தில் பாக்யாவின் மீது கோபித்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு சென்று விடுகிறாள். இவ்வாறு பாக்யா வீட்டில் இருக்கும் பண பிரச்சினையை சமாளிப்பதோடு இனியாவிற்கு ஏற்பட்ட திடீர் மாற்றத்தையும்  எப்படி சரி செய்வது என குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

Trending News