சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கண்ணம்மா சொல்றதையாவது கேட்டு தொல சௌந்தர்யா.. ஆயிரம் எபிசொடே தொடாமல் விடமாட்டீங்க போல!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கெஞ்சிக் கேட்டும் பாரதி, லட்சுமியை தன்னுடைய மகளாக ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் சீரியல் படு மொக்கையாக உள்ளது என சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றுகின்றனர்.

பாரதி பேசிய பேச்சினால் மன உளைச்சல் அடைந்த கண்ணம்மாவை சமாதானம் செய்யும் சௌந்தர்யா, லட்சுமியிடம் உனக்கு அப்பாவே இல்லை என சொல்லி விடு என்று விரக்தியடைந்து கூறுகிறாள்.

அதற்கு கண்ணம்மா, ‘அது குழந்தை மனசு. அப்பாவிற்காக ஏங்கித் தவிக்கும் குழந்தையிடம் எப்படி இதை நான் சொல்வது. அதற்கு பதில் உங்களது மகனை கட்டி இழுத்துக் கொண்டு போயாவது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால், இந்த பிரச்சினைக்கு முடிவு பிறக்கும்’ என கண்ணம்மா சௌந்தர்யாவை கடுமையான வார்த்தைகளால் அழுதுக்கொண்டே திட்டுகிறாள்.

இது சரியான தேர்வு என்றாலும் சௌந்தர்யா இதை செய்ய இனிவரும் நாட்களில் முன் வர வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் கூடவே இருந்து கொண்டு குழி பறித்துக் கொண்டிருக்கும் வெண்பாவிற்கு மட்டும் சௌந்தர்யா பாரதியை வைத்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப் போகிறார் எனத் தெரிந்தால் அந்த ரிசல்ட்டையும் மாற்றி வைத்துவிட்டு சீரியல் பார்ப்பவர்களை முட்டாள் ஆக்குவார்கள்.

இப்படித்தான் கடந்த சில மாதங்களாகவே சஸ்பென்ஸ் என்கின்ற பெயரில் சின்னத்திரை ரசிகர்களை பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனர் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான இல்லத்தரசிகள் கண்ணம்மா சொல்வதை இனியாவது கேளு சௌந்தர்யா என கண்டபடி திட்டுகின்றனர்.

ஜவ்வாக இழுத்து வரும் இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்தாள் மொத்தமும் முடிந்துவிடும் அதையும் முடிக்காமல் கதையை ஓட்டி வருகிறார் இயக்குனர்.

- Advertisement -spot_img

Trending News