தமிழில் ஒரு சில படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களிலும் நடித்து இளைஞர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அந்த பாகுபலி பட நடிகை. இவர் சமீபத்தில் தமிழ்,தெலுங்கு ,கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார், தமிழில் ஆரம்பித்த இவரது பயணம் இன்று பாலிவுட் வரை சென்றிருக்கிறது. இவர் தற்போது இந்தியில் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்..
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் எப்போதும் நடிக்க ஆசைப்படும் நடிகை தமன்னா. தற்போது இந்தியாவின் பெண் பவுன்சராக இருக்கக்கூடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையை கற்பனை கதையாக மாற்றி, அதில் தமன்னா பெண் பவுன்சராக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் தன்னை ஒரு பெண் பவுன்சராக காட்டுவதற்காக பல்வேறு உடற் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறாராம்.
பொதுவாக பெண் பவுன்சர்கள் எப்படி இருப்பார்கள் என்ன செய்வார்கள் என்று நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்களின் வேலைச் சூழல் எப்படி இருக்கும் அவர்கள் என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்கின்றனர் என்ற பல சந்தேகங்கள் இருக்கும்.
அப்படி பல விஷயங்களை இந்தப்படத்தில் தெளிவாக விளக்கிக் கூற இருக்கின்றனர். பப்ளி பவுன்சர் என்று பெயரிடப்பட்டு இருக்கக்கூடிய இந்த திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான பவுன்சர் நகரமான அசோலா பதேபூர் என்ற இடத்தை கதைக்களமாகக் கொண்டு அந்த இடத்தில் இருந்து வளர்ந்து வரும் ஒரு பெண் பவுன்சரின் கற்பனை கதையை உருவாக்கி அதை இயக்குனர் படமாக எடுக்க இருக்கிறார்.
தமன்னா இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது மிகவும் வல்லவர். அதுவும் இது போன்ற சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது தமன்னாவின் நடிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த படத்திலும் அதுபோன்ற வித்தியாசமான நடிப்புகளை தமன்னா ரசிகர்களுக்காக காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தமன்னா இது குறித்து பேசும்போது நான் நடித்த படங்களிலேயே இந்த பாப்லி பவுன்சர் தான் இதுவரைக்கும் நான் நடித்த கதாபாத்திரங்களை விட மிகவும் வித்தியாசமான உற்சாகமான எனக்கே என்னை வேறொரு ஆளாக பார்க்கத் தூண்ட வைக்கிற ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. இப்படிப்பட்ட கதாபாத்திரம் எனக்கு அமைந்தது மிக்க மகிழ்ச்சி என்று கூறினார். இந்த படம் இந்தியின் குறிப்பிடத்தகுந்த இயக்குனரான மதூர் பண்டார்கரின் படைப்பாக வெளியாகி இருக்கிறது.
அவர் இந்த படத்தை குறித்து பேசும்போது ஒரு திரைப்பட இயக்குனராக இதுவரை சொல்லாத ஒரு கதையை இந்த படத்தின் மூலமாக சொல்லக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கையை நகைச்சுவையோடு சொல்ல ஆசைப்படுகிறேன். அதேநேரம் நம் மனதை விட்டு நீங்காத ஒரு தாக்கத்தை இந்தப்படம் நமக்குள் ஏற்படுத்தும்.
ஆண் பவுன்சர் களைப் பற்றி நாம் அதிகமாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் பெண் பவுன்சர்கள் பற்றி நமக்கு அவ்வளவு பெரிதாக தெரியாது. அவர்கள் படும் துன்பம் அவர்கள் பணிச்சூழலில் போது ஏற்படும் இடஞ்சல்களை குறித்தும் இந்த படம் தெளிவாக விளக்கி இருக்கிறது. ஆக, தமன்னாவின் நடிப்பில் ஒரு வித்தியாசமான படம் திரைக்கு வரப்போகிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.