தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருந்தவர் அந்த நடிகை. அவர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடுவதை விட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை அதிகமாக தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
அப்படி அவர் நடித்து வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலக சாதனை வரலாற்று திரைப்படத்தில் அவர் நடித்த அந்த இளவரசி கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பேரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது.
அதைத்தொடர்ந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை தன் உடல் எடையை கூட்டி ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தால் நடிகைக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படவாய்ப்புகள் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை.
மேலும் ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை மிகவும் அவதிப்பட்டு வந்தார். இப்படி அவர் நினைத்ததற்கு மாறாக நடந்த படி திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி விடலாம் என்று முடிவுக்கு வந்தார் அந்த நடிகை. ஆனால் அந்த முயற்சியும் அவருக்கு கை கூடவில்லை.
நடிகையின் மனதிற்கு பிடித்தவரை ரொம்ப நாளாக தேடியும் அவருக்கு கிடைக்கவில்லையாம். இதனால் நடிகை மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். எப்படியாவது மீண்டும் தன்னுடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் நடிகை தற்போது ஒரு சர்ச்சையான கதையை தேர்வு செய்திருக்கிறார்.
நெகட்டிவான கதையாக இருந்தாலும் படம் வெளியான பிறகு எல்லோரும் தன்னைப் பற்றி தான் பேசுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் அந்த நடிகை. இந்த முயற்சியாவது நடிகைக்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.