அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாய் திரையரங்குகளில் வெளியான வலிமை திரைப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெறாமல் சென்றுவிட்டது. அஜித்தின் முந்தைய படங்களை நினைத்துப் பார்க்கும்போது ஓரளவுக்கு நல்ல கதை அம்சத்தோடு அஜித்தை சரியாக பயன்படுத்திய இயக்குனர்களுக்கு மத்தியில், இயக்குனர் H. வினோத் அவர்கள் வலிமை படத்தில் அந்த அளவிற்கு அஜித்தை பயன்படுத்தவில்லை என்று அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இருந்தாலும், பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஆக்சன் படத்தில் அம்மா சென்டிமென்ட் புகுத்திய வினோத் கண்டிப்பாக அதில் ஸ்கோர் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஏன் அப்படி கூற வேண்டும் என்றால், படத்தின் சென்டிமென்ட் காட்சிகளை அமைப்பதில் வினோத் மிக கவனமாக செயல்பட்டு இருக்கிறார். குறிப்பாக அந்த அம்மா பாடல் வரும் காட்சிகள் படத்தில் தனித்து தெரிகிறது.
அந்த பாடல் காட்சிகள் அவ்வளவு யதார்த்தமாக அமைவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இந்த வலிமை படத்தில் அஜீத்தின் அம்மாவாக நடித்த அந்த நடிகை தான். பழைய படங்களில் முன்னணி கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்த தமிழ் நடிகையான சுமித்ராதான், அஜித்தின் வலிமை படத்தில் அஜித்திற்கு அம்மாவாக நடித்து இருப்பார். வலிமை படத்தில் மிக தேர்ந்த நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
அதன் பின்பு, படத்தில் அம்மா பாடல் வரும் போது வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் அஜித்தின் அம்மாவாக உமா சங்கரி நடித்திருப்பார். சுமித்ராவின் இளம் கதாப்பாத்திரமான அந்த கதாபாத்திரத்தை உமாசங்கரி ஏற்று நடித்திருப்பார். அந்த உமா சங்கரி வேறுயாருமில்லை. அவர் சுமித்ராவின் உண்மையான மகள் தான்.
படத்தில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் H.வினோத் அவர்கள், இந்த படத்தில் சுமித்ராவின் உண்மையான மகளையே அவருடைய இளமை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். அவரும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று கட்சிதமாக நடித்திருந்தார். சினிமாவில் அதிகமாக காணப்படாத நடிகையாக மாறிப்போன இந்த உமா சங்கரி இந்த படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் இவருக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சினிமாவில் அதிக வாய்ப்புகள் இல்லாமல் ஓரங்கட்டப்பட்ட நடிகையாக இருக்கும் உமாசங்கரிக்கு இறுதியில் அம்மா வேடத்தில் நடிப்பதற்கான இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது போன்ற பல படங்களில் அவர் அம்மா கதாபாத்திரத்திலும், அக்கா, தங்கை என பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு இன்னும் ஒரு படத்தில் அவர் நடிக்கவில்லை என்ற குறை இருக்கத்தான் செய்கிறது.