புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிம்ரன் செய்ததை செய்ய தவறிய 4 நடிகைகள்.. ஒடுங்கி காணாமல் போன பரிதாபம்!

தமிழ் சினிமாவைப் பொறுத்த மட்டில் அவர்கள் தன்னுடைய அர்ப்பணிப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஆனால் நடிகைகளுக்கு அப்படியல்ல அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்தாலும், கிடைக்கும் குறைந்த காட்சிகளிலும் அவர்கள் முழுமையாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு நடித்தால் மட்டுமே அவர்கள் பெயர் வாங்க முடியும்.

சில நேரங்களில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட கதை அம்சம் கொண்ட பசங்களும் தமிழ் சினிமாவில் வந்ததுண்டு. ஆனால் அப்படிப்பட்ட கதை களங்களை தவறவிட்டு வழக்கமான நடிகைகளாக நடித்து சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகைகளைப் பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.

ஹன்சிகா : தமிழ் சினிமாவில் பப்ளி கேர்ள் ஆக அறிமுகமாகி பல படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா. காதல் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள், ரொமான்டிக் காட்சிகள் என அத்தனையிலும் பிச்சு உதறக்கூடிய ஹன்சிகா இத்தனை படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் கூட நடிக்கவில்லை. இதனாலேயே இவர் தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு தற்போது மற்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஶ்ரீ திவ்யா: பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கக்கூடிய ஸ்ரீதிவ்யா பல கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் நடித்து தன்னை நிரூபித்துக் கொண்டவர். இவரைப் பார்த்து கொஞ்சலாம், இவரின் அழகை பார்த்து ரசித்து இருக்கலாம், ஆனால் இவரின் நடிப்பிற்கான அங்கீகாரம் அளிக்க கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இவர் இறுதிவரை நடிக்கவே இல்லை. கிளாமரில் எப்போதும் அதிக கவனம் செலுத்தாத இந்த ஸ்ரீ திவ்யா கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் இருந்து மறக்கப்பட்டு இப்போது ஆல் அட்ரஸ் இல்லாமல் ஆகி விட்டார். ஏதேனும் ஒரு படங்களில் அவர் ரீ எண்ட்ரிக் கொடுத்தாலும் இன்றளவும் ஊதா கலர் ரிப்பன் மட்டுமே நம் நினைவுக்கு வருகிறது. அதை தவிர இவர் பெரிதாக தமிழ் சினிமாவில் எதுவும் செய்ய முடியாமலேயே போய்விட்டது.

லட்சுமி மேனன் : மிகச் சிறு வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்த லட்சுமிமேனன் பல படங்களில் கமிட்டாகி ஒரு நல்ல நடிகை என்ற பெயரை எடுத்து இருந்தார். அவருடைய கேரியரில் பல படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதைக்களம் அமைந்திருந்தாலும் இவர் அந்த படங்களை தவற விட்டதால் இப்போது வரை தன்னை நிரூபித்துக் கொள்ள முடியாமல் போராடி வருகிறார். அதனால் இவரும் தமிழ் சினிமாவில் ஒரு தேடப்படும் நடிகையாக தான் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் பெரிதாக பேசப்படாத நிலையில் வெறும் இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் மட்டுமே இவரை தற்போது காண முடிகிறது.

கீர்த்தி சுரேஷ் : இந்த லிஸ்டில் எப்படி இவர்கள் என்று நினைப்பவர்களுக்கு கீர்த்தி சுரேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் அவர் தொடர்ந்து அதனை செய்யாமல், அப்படியே மறந்து விட்டு அவரும் தற்போது ட்ராக் மாறி சென்று கொண்டிருக்கிறார். அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை நடிக்கும்போது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார். ஆனால் அவருடைய கால சூழ்நிலை காரணமாக அவர் பல படங்களில் கமிட்டாகி இன்று வழக்கமான ஹீரோயின்களின் லிஸ்டில் இருக்கவே விரும்புகிறார் போல. அதனால்தான் இந்த லிஸ்டில் கீர்த்தி சுரேஷும் சேர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடிகைகள் பெயர் வாங்குவது என்பது எளிதான காரியமல்ல. அப்படி இருந்தும் ஜோதிகா, ரேவதி , சிம்ரன், ராதிகா என பல நடிகைகள் இன்றளவும் நம் மனதில் வைத்து, இன்று அவர்கள் நடிக்கும் படங்களில் கொஞ்சம் கூட அந்த கரிஸ்மா குறையாமல் அவர்களை நாம் ரசித்து பார்க்கிறோம். சிம்ரன் பிரியமானவளே படத்தில் தனக்கென்று ஒரு கதாபாத்திரத்தை விஜய்யை மிஞ்சும் அளவிற்கு நடித்திருப்பார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தில் நடித்து இருந்ததால்தான்.

இதனால்தான் அவர்கள் இன்றளவும் தமிழ்சினிமாவில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் நடிகைகளாக இருக்கின்றனர். அதை தவற விடும் இந்த தலைமுறை நடிகைகள் சினிமாவிலிருந்து விரைவில் காணாமலும் போய்விட்டனர். இருந்தாலும் இப்போது, நடிகை நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகள் அதை சரியாக புரிந்து கொண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தங்களது மார்க்கெட்டுகளை சரியாமல் பார்த்துக் கொள்கின்றனர். ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை கேட்டு வாங்கும் அளவிற்கு கெத்தாக இருகின்றனர்.

Trending News