ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிரபுவின் படத்தை ரீமேக் செய்து 100 கோடி லாபம் பார்த்த பிரபலம்.. ஆனா இங்க 3 நாள் கூட ஓடலையாம்!

தமிழில் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களையும் இயக்கியிருப்பவர் நடிகர் டிபி கஜேந்திரன். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படியாக தான் இருக்கும்.

அப்படி இவரின் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படம் பந்தா பரமசிவம். இந்தப் படத்தில் நடிகர் பிரபு, கலாபவன் மணி, அப்பாஸ், ரம்பா, மோனிகா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு முன்பு கஜேந்திரன், பிரபுவை வைத்து மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

அந்த திரைப்படங்களில் இடம் பெற்றிருந்த காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவை. அந்த வரிசையில் வெளியான இந்த பந்தா பரமசிவம் திரைப்படம் ரசிகர்களை அந்த அளவிற்கு கவரவில்லை. இதனால் இந்தத் திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடாமல் படுதோல்வி அடைந்தது.

ஆனாலும் இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் அஸ்வின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெறும் இரண்டே கோடியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அது மட்டுமல்லாமல் 100 கோடி வரை வசூலித்து பெரும் சாதனை புரிந்தது. ஏற்கனவே மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தை தான் தமிழில் ரீமேக் செய்திருந்தனர். இப்படம் மலையாளத்தில் மேட்டுப்பட்டி மச்சான் என்ற பெயரில் வெளியானது.

தமிழில் படுதோல்வி அடைந்த இந்த திரைப்படத்தை இந்தியில் ஹவுஸ்ஃபுல் 2 என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் படம் அங்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் தமிழில் இந்த திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு பிரபு ஹீரோவாக நடிக்காமல் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து குறிப்பிடத்தக்கது.

Trending News