செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

சங்க தலைவரை நம்பி ஏமாந்த நடிகை.. புலம்பலுடன் போட்ட சபதம்

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் அந்த இளம் நடிகை. தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இவருக்கு தமிழில் பிரபல நடிகையாக ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று தீராத ஆசை இருக்கிறதாம்.

இதனால் அவர் தமிழில் சங்கத் தலைவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று தனக்கு பேரும், புகழும் கிடைக்கும் என்று நடிகை ரொம்பவும் எதிர்பார்த்தாராம். ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறான விஷயம்.

நடிகை மிகவும் எதிர்பார்த்த அந்த படம் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டது. இதனால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்த அந்த நடிகைக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் நடிகை படக்குழுவினர் தன்னை ஏமாற்றி விட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.

படக்குழுவினர் படத்தைப் பற்றி ஓவர் பில்டப் கொடுத்து நடிகையை உசுப்பேற்றியது தான் நடிகையின் புலம்பலுக்கு முக்கிய காரணமாம். படக்குழுவினரை நம்பிய நடிகை தற்போது படம் ஓடாத விரக்தியில் நொந்து போய் இருக்கிறாராம்.

இதனால் இனிமேல் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் தான் நடிப்பேன் என்று நடிகை சபதம் செய்யாத குறையாக இருக்கிறாராம். அப்படிப்பட்ட கதையுடன் வரும் இயக்குனருக்காக நடிகை தற்போது காத்திருக்கிறார்.

Trending News