விஜய் டிவியின் சீரியலில் பாக்யாவிற்கே தெரியாமலேயே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய கோபி, அதை வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்திலும் விவாகரத்து வேண்டும் என விண்ணப்பித்து இருக்கிறார். இதனால் நீதிமன்றத்திலிருந்து பாக்யா மற்றும் கோபி இருவரையும் நேரில் ஆஜராக வேண்டும் என்ற கடிதம் வீட்டிற்கு வந்திருக்கிறது.
இதில் பாக்யா மற்றும் கோபி இருவரின் பெயர் இருந்ததால் வீட்டில் இருப்பவர்கள் ஏதோ பிரச்சினை இருக்கிறதோ என்ற பயத்தில் அந்த கடிதத்தை வாங்கி பிரித்துப் படிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பாக்யா அதை வேண்டாம் என அவர்களிடமிருந்து வாங்கி, சமையல் அறையில் வைத்து விடுகிறார்.
அதன் பிறகு கோபி, ‘எனக்கு ஏதாவது கடிதம் வந்ததா? என பாக்யாவிடம் கேட்க, உடனே பாக்யா, ‘ஆமாங்க அதை வாங்கி எங்கேயோ வைத்து விட்டேன்’ என பொறுப்பில்லாமல் பதிலளித்து தன்னை முட்டாள் என கணவர் முன்பு அடிக்கடி பாக்யா காட்டுவது சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன் கணவரிடம் தன்னை தாழ்த்திக்கொண்டு நடக்கும் பாக்யாவின் ஒருசில நடவடிக்கையாலே கோபி, பாக்யாவை விட்டுவிட்டு அவருக்கு சரியாக பொருத்தமாக இருக்கும் என நினைத்து ராதிகாவை தேடி செல்கிறார். இதனால் பாக்யாவின் செய்கை காரணமாகவே கோபி இன்னொரு பெண்ணை தேடி போகிறான் என சில ரசிகர்கள் கோபிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் வெகுளித்தனமாக இருக்கும் பாக்யா, கோபி தன்னை விவாகரத்து செய்து கொள்ள நினைக்கிறார் என்பதை புரிந்த பிறகு தான், தெளிவாகவும் மற்றவர்களிடம் விவரமாகவும் நடந்துகொள்ள ஆரம்பிக்கப் போகிறார்.
ஆகையால் இனி வரும் நாட்களில் கோபி பாக்யாவை நிரந்தரமாக பிரிந்து வாழ போக எடுக்கும் முடிவு, பாக்யாவை இன்னும் மனதளவில் உறுதிப்படுத்தி துணிவுடன் எதையும் தங்கக்கூடிய பெண்ணாக மாற்ற போகிறது.