சமீபகாலமாக சின்னத்திரை நாயகிகள் வெள்ளித்திரை பக்கம் படையெடுத்து வருவது அதிகமாகி விட்டது. அந்த வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக வந்தவர் தான் அந்த நடிகை.
சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பாப்புலராக இருந்த அந்த நடிகை சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தினால் சீரியல் வாய்ப்பை உதறித் தள்ளிவிட்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு வந்தார். மிகவும் சந்தோஷத்துடன் வந்த நடிகைக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்.
ஏனென்றால் நடிகை சீரியல்களில் மிகவும் குடும்ப பாங்காக அடக்க ஒடுக்கமாக நடித்தவர். அவரை சினிமாவில் படுக்கையறை காட்சிகளிலும், அந்தரங்க காட்சிகளிலும் நடிக்கச் சொன்னால் அவருக்கு எப்படி இருக்கும்.
இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்காத அந்த நடிகை மிகவும் நொந்து போய் விட்டாராம். அந்த காட்சிகளில் நடிப்பதற்கு தயக்கம் காட்டிய நடிகைக்கு வந்த வாய்ப்பும் பறிபோனது. பேசாமல் சின்னத்திரை பக்கமே இருந்திருக்கலாமோ என்று நடிகை தற்போது பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம்.
மேலும் சினிமா உலகம் நாம் நினைத்தது போல கிடையாது அங்கு பல மோசமான விஷயங்களும் இருக்கிறது என்று நடிகை தன் தோழிகளிடம் கூறி இருக்கிறார். சினிமா வட்டாரத்தில் இருக்கும் கலாச்சாரத்தைப் பற்றியும், நடிகைகள் பற்றியும் நடிகை புலம்பி வருவதை பார்த்த மற்ற சீரியல் நடிகைகள் நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றனர்.
முதலாளி வீட்டில் சிறிது நாட்களாக காதல் என்ற வலையில் சறுக்கி விழுந்தவர் அந்த நடிகை. இங்கு இருக்கும் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டு சினிமாவை தேடி ஓடிய நடிகைக்கு நல்ல ஆப்பு கிடைத்தது என்று சக சீரியல் நடிகைகள் தற்போது நடிகையை பற்றி பேசி வருகின்றனர்.