தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை பெற்று மாஸ் காட்டி வருபவர் அந்த பிரபல நடிகர். இவருடன் நடிப்பதற்காகவே பல இளம் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு வருவார்கள். மேலும் நடிகரைப்பற்றி வாய் ஓயாமல் புகழ்ந்து தள்ளும் நடிகைகளும் உண்டு.
ஆனால் தற்போது இருக்கும் இளம் நடிகைகள் நடிகருக்கு ஜோடி சேர தயங்கி வருகிறார்களாம். என்னவென்றால் நடிகர் தற்போது சின்ன வயசு நடிகராக நடிக்க விரும்பவில்லை என்று வெளிப்படையாக சொன்னது தான் காரணமாம். அதனால்தான் நடிகருக்கு மற்ற மாநிலங்களிலிருந்து வயதான நடிகைகளை ஜோடி சேர்த்து வருகிறார்களாம்.
இதனால் நடிகரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களும் நடிகருக்கு ஜோடியாக வயதான நடிகைகளை புக் செய்ய மற்ற மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்களாம். ஏனென்றால் கோலிவுட்டில் இருக்கும் வயதான நடிகைகளே இளம் நடிகைகளை போல போட்டோ ஷூட் நடத்தி வருவதால் வெளிமாநில நடிகைகள் நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.
அந்த நடிகருக்கு தொடர்ச்சியாக இரண்டு படங்களை டைரக்ட் செய்த அந்த இயக்குனருக்கு இளம் ஹீரோயினை புக் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசையாம். இதை நடிகரிடமும் கூறி ஒரு வழியாக சம்மதம் வாங்கி விட்டாராம் இயக்குநர்.
ஆனால் அவரின் அந்த பேராசையில் தற்போது இடி விழுந்துள்ளது. காரணம் என்னவென்றால் இயக்குனர் தற்போது மாஸ் ஹீரோ ஒருவரின் படத்தில் நடித்து வரும் அந்த இளம் நாயகியை தன்னுடைய படத்தில் புக் செய்ய நினைத்துள்ளார். இதற்காக அந்த நடிகையையும் அவர் அணுகியுள்ளார்.
ஆனால் நடிகை தரப்பிலிருந்து இப்போதைக்கு தேதி இல்லை என்ற பதில்தான் கிடைத்ததாம். தற்போது அனைத்து மொழி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு பிரபலமாக இருக்கும் அந்த நாயகி உண்மையில் தேதி இல்லாமல்தான் நோ சொல்லிவிட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று கோடம்பாக்கத்தில் பேச்சாக கிடக்கிறது.
நடிகை படத்தில் நடிக்க நோ சொல்லி விட்டதால் இயக்குனர் தற்போது வேறு ஒரு இளம் நாயகியை படத்தில் நடிக்க வைக்க தன்னுடைய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துவிட்டாராம்.