தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டி இமான் இசை அமைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார்.
அஜித்தின் விசுவாசம் படத்தின் மூலம் டி இமான் அவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. டி இமான் இசை அமைப்பாளராக மட்டுமல்லாமல் பல படங்களில் பின்னணி பாடல்களும் பாடி உள்ளார். சிவகார்த்திகேயன் படங்களில் இமான் பாடிய பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் டி இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் சமீபத்தில் தாங்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெறுவதாக இமான் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில் என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது. நானும் என்னுடைய மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்துப் பெற்று பிரிந்து விட்டோம்.
இனி நாங்கள் கணவன், மனைவி இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டிருந்தார். இது டி இமான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது இமான் மறுமணம் செய்ய போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இமான், உமா என்பவரை திருமணம் செய்யப்போவதாகவும், இரு வீட்டாரும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனால் கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது