சூர்யாவுக்கு ஏத்த ஜோடி இவங்கதான்.. பாலா கண்டுபிடித்த அந்த நடிகை

நடிகர் சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் இணையும் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு எடுக்கப்பட இருக்கிறது. அதற்காக சூர்யா இன்னும் சில நாட்களில் மதுரைக்கு செல்ல இருக்கிறார். படப்பிடிப்பே ஆரம்பிக்க போகிறது ஆனால் படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

மேலும் தற்போது சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் படமாக்கப்பட இருக்கிறது என்ற செய்திகளும் ஒரு புறம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த படத்திற்கான ஹீரோயினை பாலா எப்போதோ முடிவு செய்துவிட்டார்.

இதுவரை அவரின் படத்தில் இல்லாத ஒரு சிறப்பாக ஒரு சீனியர் ஹீரோயின் தான் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பொதுவாக பாலா திரைப்படம் என்றாலே நடிப்பதற்கு ஹீரோயின்கள் அனைவரும் பயந்து நடுங்குவார்கள். ஏனென்றால் அந்த கேரக்டரில் நடிப்பதற்கு அவர்கள் நிறைய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்.

இப்படி அவரின் இயக்கத்தில் வரலட்சுமி, பூஜா உள்ளிட்ட பல நடிகைகள் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறனர். அந்த வகையில் தற்போது பாலா படத்தில் இணைய போகும் அந்த நடிகை வேறு யாருமல்ல சூர்யாவின் மனைவி ஜோதிகா தான். இவர் ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அதனால் தான் பாலா சூர்யாவின் வீட்டிலேயே ஒரு ஹீரோயின் இருக்கும் பொழுது நாம் ஏன் வேறு இடத்தில் தேட வேண்டும் என்று ஜோதிகாவை புக் செய்து விட்டார். ஒரு வகையில் அவர்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைவது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும்.

இதுதவிர சூர்யா இந்தப் படத்தில் காது மற்றும் வாய் பேச முடியாதவராக நடிக்க இருக்கிறார். பாலாவின் படத்தில் இதுபோன்ற ஊனமுற்ற கதாபாத்திரம் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சூர்யாவிற்கு இப்படி ஒரு கதாபாத்திரம் நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.