இயக்குனர் மனோபாலாவை இயக்குனராக அறிந்தவர்களை விட, அவரை பல படங்களில் காமெடி நடிகராக தான் தற்போதைய 2k கிட்ஸ்கள் அறிந்திருப்பார்கள். 18க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கி இருக்கிறார். ஆனால், அவர் எடுத்த பல படங்கள் இன்றும் பேசப்படும் அளவிற்கு தரமான படங்களாக இருக்கிறது. இப்படி இருக்கையில் 1987 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஊர்காவலன் படம் வெளியானது.
இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பல முனைகளிலிருந்தும் வாய்ப்புகள் வந்து குவிந்தது. அதன் பிறகு வெகுகாலம் கழித்து ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படத்தின் கதை உருவான பிறகு இந்தப் படத்தை யார் இயக்குவது என்பது குறித்தான தேடுதல் வேட்டை, அந்த படத்தின் தயாரிப்பாளர் வாயிலாக நடைபெற்றது.
அந்த நேரத்தில் முதலில் அந்த லிஸ்டில் இருந்தது மனோபாலாவின் பெயர்தான். ஒரு வழியாக பேச்சு வார்த்தையில், அவர்தான் இந்த படத்தை இயக்கப்போகிறார் என்று முடிவாகிவிட்டது. மனோபாலாவும் நாம் இந்த படத்தை இயக்கப் போகிறோம் என்று தன்னுடைய ஆயத்த பணிகளை தொடங்கி விட்டார். ஆனால், அதற்குள் இந்தப் படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானதும் மனோபாலா அதிர்ந்து போனார்.
இதனால் மிகுந்த கோபம் அடைந்த மனோபாலா நேராக ரஜினி வீட்டுக்கே சென்று என்ன சார் நினைச்சிட்டு இருக்கீங்க..? நான் தானே டைரக்டர் என்று சொன்னீர்கள்..? இப்பொழுது சுரேஷ் கண்ணா என்று கூறுகிறீர்கள் என்று மிகவும் கோபமாக கேட்டிருக்கின்றார்.
அதற்கு ரஜினிகாந்த் நிஜமாக எனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது, பாட்ஷா படத்திற்கு நல்ல இயக்குனர் வேண்டும் என்று தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது மட்டுமே எனக்கு தெரியும். அதன் பிறகு சுரேஷ் கிருஷ்ணா இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள். நான் சரி என்று கூறினேன், அவ்வளவுதான் எனக்கு தெரியும் என்று கூறி நழுவி விட்டாராம். நீங்கள் பாட்ஷாவின் இயக்குனர் என்று யாருமே எனக்கு சொல்லவில்லை என்று கூறிவிட்டாராம்.
நீங்கள்தான் இயக்குனர் என்று கூறியிருந்தால் நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறவும் வேறு வழியில்லாமல் மனோபாலா அதை ஏற்றுக் கொண்டாராம். அதன்பிறகு ரஜினிகாந்தின் மனைவி லதா ஒரு மோர் கொடுத்து என்னை கூலாக அனுப்பி வைத்துவிட்டார்கள் ஆனால் இன்றளவும் எனக்கு அந்த வாய்ப்பு கை நழுவி போனதை நினைத்து பார்க்கும்போது வருத்தமாக தான் இருக்கிறது என்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியான ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் மனோபாலா.