வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஆத்திரத்தில் கொல்லத் துடிக்கும் வெண்பா.. வசமாக சிக்கிய ஆதாரம்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களாக பிரிந்து வாழும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேரவிடாமல் வில்லி வெண்பா கச்சிதமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாரதியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள பாரதியின் மகள் ஹேமாவை வளைத்துப் போட திட்டமிட்டிருக்கிறார்.

ஆனால் இதற்கு ஹேமா அடிபணியாததால் கோபத்தில் வீட்டு வேலைக்காரி சாந்தியிடம், பாரதி மற்றும் கண்ணம்மாவை எப்படி பிரித்தேன் என்றும் பாரதிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும் விலாவரியாக உளறிக் கொட்டுகிறார்.

இதை வெண்பாவின் கூட்டாளியும் தற்போது வெண்பாவிற்கு எதிரியாகவும் இருக்கும் மாயாண்டி அனைத்தையும் வீடியோ எடுத்து விட்டான். இந்த வீடியோவை பாரதி மற்றும் கண்ணாம்மாவிடம் காட்டக்கூடாது என்றால், எனக்கு பணம் கொடுக்க வேண்டுமென வெண்பாவை மிரட்டுவதற்காகவே மாயாண்டி அந்த வீடியோவை எடுத்து தன்வசம் வைத்திருக்கிறான்.

இதனால் வெண்பாவும் மாயாண்டி கேட்பதை கொடுக்கிறாள். ஒரு கட்டத்தில் மாயாண்டி, பாரதி அல்லது கண்ணம்மா இருவருக்கும் இந்த வீடியோவை அனுப்பினால் தன்னுடைய கதை முடிந்து விடும் என்பதை உணர்ந்து மாயாண்டியை வெண்பா கொல்ல துப்பாக்கியுடன் கோபத்தில் கிளம்புகிறாள்.

ஆனால் சாந்தி வெண்பாவை தடுத்து நிறுத்தி, ஏற்கனவே குற்ற வழக்கில் இருக்கும் நீங்கள் மறுபடியும் கொலை செய்தால் வாழ்நாள் முழுவதும் ஜெயில் தான் என எச்சரிக்கிறாள். அதன்பிறகு நிதானத்துடன் செயல்பட சிந்திக்கும் வெண்பா, மாயாண்டி வேறு வழியில் தான் தீர்த்து கட்ட வேண்டுமென முடிவெடுக்கிறாள்.

எனவே ஒருவகையில் கண்ணம்மாவிற்கு நெருங்கிய சொந்தக்காரரான மாயாண்டி கண்ணம்மாவிடம் இதுபற்றி லேசாக கசக்கிய விடவும், மாயாண்டி குடிபோதையில் இதையெல்லாம் உலரவும் வாய்ப்பிருக்கிறது.

Trending News