சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து, பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய் பீம் படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஆடியோ லான்ச் ஃபங்க்ஷன் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், சூர்யாவை வம்புக்கு இழுத்துள்ளார். அதில் உங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள், இவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என சூர்யாவை பார்த்து சத்யராஜ் கேட்டுள்ளார்.
சத்யராஜ் மறைமுகமாக அரசியல் ஆசையை சூர்யாவுக்கு ஏற்படுத்துகிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் சூர்யா ரசிகர்களுக்காக உண்மையில் நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறார். தன்னுடைய அகரம் பவுண்டேசன் சார்பாக பல மாணவர்களுக்கு கல்வியைக் கொடுத்து வருகிறார் சூர்யா.
அகரம் அறக்கட்டளை தொடங்கி சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் 5000க்கும் மேலான ஏழை மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்கள். சூர்யா தன்னுடைய அறக்கட்டளை மூலமாக படிப்பு சார்ந்த பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் கஷ்டப்படும் ரசிகர்களை எப்படியாவது ஒரு அந்தஸ்தில் கொண்டு வர வேண்டுமென உழைக்கிறார்.
தற்போது கல்வியுடன் இணைந்து விவசாயத்தையும் இளைய சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து உள்ளனர். தற்போது சத்யராஜின் இந்த பேச்சால் சூர்யாவின் பாதை மாறி விடக்கூடாது என ரசிகர்கள் விரும்புகிறார்கள். சூர்யா இந்த மாதிரி ஆசையை எல்லாம் தகடு தகடு என சத்யராஜ் பாணியிலேயே தூக்கி எறிந்துவிடுவார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.