செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

காதலித்தவரே கைவிட்ட பரிதாபம்.. நடிகைக்கு கிடைத்த புது வரவு

சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் அந்த ரியாலிட்டி ஷோ மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். பிரபலங்களைப் பற்றிய பல விஷயங்களை கண்கூடாக பார்ப்பதால் மக்களும் அந்த நிகழ்ச்சியை ஒரு ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

மக்களின் முன்பு தங்களை நிரூபித்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு தான் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. பலருக்கு மோசமான விளைவுகளையே கொடுத்திருக்கிறது.

அதில் இன்றுவரை மக்களின் வெறுப்புக்கு ஆளான ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படி மனம் முழுக்க சினிமா கனவுகளுடன் வந்தவர்தான் அந்த பக்கத்து தேசத்தின் பிரபலம். ஆரம்பத்தில் அம்மணியை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள் போகப்போக அவரின் நடவடிக்கைகளால் வெறுக்க ஆரம்பித்தனர்.

ஏனென்றால் அம்மணி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர் ஒருவருடன் அடித்த லூட்டி தான் காரணமாம். நல்ல ஜோடியாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்த வேளையில் அம்மணி நிகழ்ச்சி முடிந்த உடனே அவரை கழட்டி விட்டு விட்டார்.

இருந்த போதிலும் அவருக்கு நிகழ்ச்சி முடிந்த உடனேயே படவாய்ப்புகள் சரசரவென குவியத் தொடங்கியது. இதனால் அவரும் பிரபல நடிகையாக வலம் வரலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார். ஆனால் அந்த கனவு கனவாகவே போய்விட்டது.

நடிகை நடித்த முதல் படம் சொதப்பியதில் அவர் ரொம்பவும் அப்செட்டாகி விட்டாராம். அதோடு அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படங்களும் வரவேற்பை பெறாது என்பதும் அவருக்குத் தெரிந்துவிட்டது. இதனால் கவலையில் இருக்கும் நடிகைக்கு வேறு ஒரு வருத்தமும் இருக்கிறதாம்.

அதாவது நடிகை கழட்டி விட்ட அந்த காதலர் தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அப்படி நடிக்கும் அந்த படங்களில் அவர் நடிகையை ஹீரோயினாக புக் செய்ய மறுத்து வருகிறாராம். இதுதான் அம்மணியின் வருத்தத்திற்கு காரணம்.

அதோடு இவருக்கு வரும் சினிமா வாய்ப்புகளையும் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் அந்த நடிகை தட்டிக் கொண்டு சென்று விட்டாராம். இதனால் நொந்து போன நடிகை பழைய வேலைக்கே சென்று விடலாம் என்று நினைத்த வேளையில் அந்தப் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவில் மீண்டும் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

இதனால் குஷியான நடிகை விட்டதை மீண்டும் பிடிக்கப் போகிறேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி சந்தோசப்பட்டு வருகிறாராம். இந்த முறையாவது அவர் நினைத்தது நிறைவேறுமா என்று திரையுலகில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Trending News